பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளது

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நெதர்லாந்து அரசாங்கத்தின் இலகு கடன் திட்டத்தின் கீழ் புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டது. இப் புதிய கட்டிடமானது அதி மேதகு சனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் எதிர்வரும் 22 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
இத் திறப்பு விழாவில் கடற்தொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கௌரவ சுகாதார இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் கௌரவ சீதா அரம்பேபொல, வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம். சார்ல்ஸ் ,இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இத் திட்டத்தின் கீழ் மூன்று மாடி விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு அதற்குத் தேவையான மருத்துவ உபகரணங்களும் தளபாடங்களும் வழங்கப்பட்டுள்ளன. இத் திட்டத்திற்காக நாநூறு கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. இப் புதிய கட்டிடத் தொகுதியில் அவசர சிகிச்சைப் பிரிவு தீவிர சிகிச்சைப் பிரிவு, ஐந்து சத்திர சிகிச்சைக் கூடங்கள் சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்புப் பிரிவு, ஊவு ளுஉயn உட்பட கதிரியக்கப் பிரிவு, சிறுவர்களுக்கான சிகிச்சைப் பிரிவு, நோயாளர் தங்கும் விடுதிகள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.