தவிசாளருக்கு பொன்விழா வாழ்த்துக்கள்
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை (கரவெட்டி) தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் அவர்களின் பென் விழா பிறந்த நாள் இன்று ஆகும்.
வடமராட்சி பகுதியில் இவரின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வடமராட்சி பகுதியில் இவர் தவிசாளராக தற்போது இருக்கும் காலத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடுகின்றனர். குப்பைகளை உரமாக்கும் நிகழ்ச்சி திட்டம், குறுக்கு வீதிகள் உட்பட பல வீதிகள் புனரமைப்பு, மக்களின் பாதுகாப்பிற்கு வீதிகளில் கண்காணிப்பு கமரா, தனது சொந்த நிதியில் நிவாரணப் பணிகள், என பல விடயங்களை மேற்கோள் காட்டியுள்ளனர். அவருக்கு எமது நியூஸ் தமிழ் இணையத்தளத்தினூடாக பிறந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.