Fri. May 17th, 2024

சிவானந்தாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான ஆண்களுக்கான 5000 மீற்ரர் ஓட்டத்தில் சிவானந்தா விளையாட்டுக் கழக வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைச் சுவீகரித்துள்ளனர்.

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான தடகளப் போட்டிகள் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டத்தில் சிவானந்தா விளையாட்டுக் கழத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சா.சந்தோஸ் தங்கப் பதக்கத்தையும், இ.தனுஸ் வெள்ளிப் பதக்கத்தையும்,  சென்தோமஸ் விளையாட்டு கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த தி.அருள்சீலன் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்