Sun. May 19th, 2024

அரும்புகளுக்கான உதைபந்தாட்ட தொடர் முடிவுகள்

Northern sports college இன் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட அரும்புகளுக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் ஹென்றிசியன் அக்கடமியும், பெண்கள் பிரிவில் சிறிமுருகன் அக்கடமியும் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இத்தொடர்  பத்து வயதுபிரிவினருக்கான ஆண் பெண் இருபாலருக்கும் நடாத்தப்பட்டது. இப்போட்டியில்  14அக்கடமி அணிகள் கலந்துகொண்டன. ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தை ஹென்றிசியன் அக்கடமியும், இரண்டாம் இடத்தை யாழ் அக்கடமியும், மூன்றாம் இடத்தை சென்அன்ரனீஸ் அக்கடமியும் பெற்றுக்கொண்டன.
பெண்கள் பிரிவில் சிறிமுருகன் அக்கடமி முதலாம் இடத்தையும் 2ம் 3ம் இடத்தை Northern sports college அக்கடமியும் பெற்றுக்கொண்டன.
இயக்குனர் க.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக
வடமாகாண உடற்கல்வி பணிப்பாளர்
இராஜசீலன், சிறப்பு விருந்தினராக யாழ் கல்வி வலய உடற்கல்விஉதவிக் கல்விப் பணிப்பாளர் சாரங்கன், இராமநாதன் கல்லூரி அதிபர் அம்பிகை சிவஞானம்,  கெளரவ விருந்தினராக உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்க தலைவர் ப.தர்மகுமாரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்