Sun. May 19th, 2024

ஆசிரிய இடமாற்றத்தில் முறைகேடு

யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஆசிரிய இடமாற்றங்களில் முறைகேடு நடைபெறுவதாக அங்கு கடமையாற்றும் ஆசிரியர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாண்டுக்கான ஆசிரிய இடமாற்றங்களின் மேன்முறையீடுகள் நடைபெற்று இடமாற்றங்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் பல ஆசிரியர்கள் குறித்த பாடசாலைகளில் 7 வருடங்களைக் கடந்தும் இடமாற்றம் வழங்கப்படவில்லை. சில பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்ட போதிலும், அதிபர்களின் செல்வாக்கு காரணமாக இடமாற்ற பாடசாலைக்கு தமது கடமையைப் பொறுப்பேற்காது உள்ளனர்.
இதனால் குறித்த பாடசாலைகளில் ஏனைய ஆசிரியர்கள் இடமாற்றம் பெறுவது கடினமாக உள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. யாழ் கல்வி வலயத்தில் வெளிமாவட்ட ஆசிரிய சேவையை பெறாமல் தொடர்ந்தும் தமது செல்வாக்குகளை பயன்படுத்தி காலத்தை இழுத்தடித்து வயது முதிர்ந்தவர்களின் பட்டியலில் வந்து சேர்கின்றனர். இடமாற்ற கொள்கை என்பது எல்லோருக்கும் சமமானது. குறித்த காலப்பகுதியில் வெளிமாவட்டம் செல்லாமல் இருப்பது யாருடைய தவறு. இவ்வாறான ஆசிரியர்களை வயதை கருத்தில் கொள்ளாது வெளிமாவட்ட கடமையை நிறைவேற்ற வேண்டுமென கொண்டு வந்தால் அனைவரும் தமது காலத்தை முடித்துக் கொள்வார்கள். இல்லையேல் இவர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு இடைநிறுத்தப்படும் என அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக ஆசிரிய சங்கங்கள் மெளனம் சாதிப்பது ஏன்? ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் கடமைகளை பொறுப்பேற்காது விடின் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்