Tue. May 14th, 2024

2015ம் ஆண்டுக்கு முன்னா் இலங்கை ஒரு நரகம்! அதை யமன் என்ற கோட்டா ஆண்டாா்.

2015ம் ஆண்டுக்கு முன்னா் இந்த நாடு ஒரு நரகமாக இருந்தது. அதனை கோட்டபாய என்ற யமன் ஆட்சி செய்தா ன். அவ்வாறானதொரு நரகம் மீண்டும் உருவாவதற்கு யாரும் இடமளிக்ககூடாது.

என சரத் பொன்சேகா கூறியி ருக்கின்றாா்.  2015ம் ஆண்டின் பின்னா் மனிதர்களை கடத்திச் சென்று செய்யாத அட்டூழியங்கள் இல்லை.

அவ்வாறானதொரு அச்சுறுத்தலான சூழலிலேயே நாம் வாழ்ந்தோம். ஏகாதிபத்திய குடும்ப ஆட்சியின் எமக்கு சுதந்திரம் இருக்கவில்லை.

விரும்பியவாறு அரசியலில் ஈடுபடுவதற்கு சுதந்திரம் இருக்கவில்லை.  ஜனாநாகமும் இருக்கவில்லை. அமைச்சர்கள் பெயரளவில் மாத்திரமே இருந்தார்கள்.

ஏகாதிபதி சொல்வதை மாத்திரமே அமைச்சர்களும் செய்தார்கள். விரும்பிய எதையுமே செய்ய முடியாமல் மக்களுக்கு அடிமை போல் வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

எனினும் இது போன்ற ஆட்சி தொடராமலிருக்க வேண்டும் என்பதற்காக 2015 ஜனவரி 8 ஆம் திகதி ஜனநாயகத்தை தோற்றுவித்தோம்.

அரசியல்வாதிகளுக்கு மாத்திரமின்றி யாருக்கும் தலைகுணிய வேண்டிய நிலைமையை இல்லாமலாக்கி சுதந்திரத்தை வழங்கினோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எம்மால் ஏற்படுத்தப்பட்ட இவை அனைத்தையும் மீண்டும் இல்லாமல் செய்ய இடமளிக்க முடியாது என்றும் கூறினார்.

புதிய ஜனநாயக முன்னணியினால் இன்று கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்