Sun. May 19th, 2024

16 வயது 800 மீற்றர் சென்ஜோன்ஸ் தங்கம்

16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான 800 மீற்ரர் ஓட்டத்தில் சென்ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த கே.ஆகாஷ் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் நடாத்தும் கனிஸ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவினருக்கான தடகளப் போட்டிகள் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் யா/சென்ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த கே.ஆகாஷ் தங்கப் பதக்கத்தையும், சென்ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த சி.அபிலாஷன் வெள்ளிப் பதக்கத்தையும்,  மானிப்பாய் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.ராகுல் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்