Thu. May 16th, 2024

ஹம்பாந்தோட்டா துறைமுகத்தினை திரும்பி பெற சீனாவுடன் பேச்சுவார்த்தை -கோத்தபாய

வல்லரசுகளின் அதிகாரப் போராட்டங்களுக்கு இடையில் நாங்கள் செல்ல விரும்பவில்லை. ஆனால் நாங்கள் எல்லா நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம் ” என்று ஆட்சிக்கு வந்து முதன் முதலாக இந்திய செய்தி நிறுவனங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சீனாவுடன் இலங்கையின் உறவு “முற்றிலும் வணிகரீதியானது” என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

99 ஆண்டு குத்தகைக்கு ஹம்பாந்தோட்டா துறைமுகத்தின் கட்டுப்பாட்டை சீனாவிடம் ஒப்படைப்பது கடந்த ஆட்சியின் தவறு என்று கூறிய கோத்தபாய , இந்த துறைமுகத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளுமுகமாக சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்

இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற உலக வல்லரசுகள் இலங்கையில் சீனாவின் ஈடுபாட்டைப் பற்றி பயப்படுகிறார்கள் என்பதே உண்மை என்றும் ராஜபக்ஷ இந்த செவ்வியில் குறிப்பிட்டார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்