Fri. May 17th, 2024

வைத்திய அத்தியட்சகராக தொடர்ந்தும் வே.கமலநாதன்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நிரந்தர  வைத்திய அத்தியட்சகராக த.குகதாசன் அவர்களை  நியமிக்குமாறு சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அவர்களை ஊடகங்கள் தொடர்பு கொண்டு கேட்ட போது, விசாரணைக் குழு அறிக்கையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக த.குகதாசன் அவர்களை நியமிக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளது.  இதனடிப்படையில் தற்போது நிரந்தர வைத்திய அத்தியட்சகர் ஒருவரை நியமிக்கும் வரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வே.கமலநாதன் அவர்களே தொடர்ந்தும் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றுவார் எனத் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்