Fri. May 17th, 2024

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளுக்கு துணைபோகும் அரசியல்வாதியாக மாறவேண்டாம்

பருத்தித்துறை ஆதார வைத்தியசால
எமது வைத்தியசாலைக்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்ட யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும்இ கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் வைத்தியசாலையின் விடுதிகளை பார்வையிட்டு வைத்தியசாலையின் தேவைகளை கேட்டறிந்தார்.
வைத்தியசாலையை புதிய நிர்வாகம் பொறுப்பெடுத்த இந்த எட்டு மாதகாலத்தில் துரித அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நன்கொடையாளர்களின் நிதிப்பங்களிப்பின் ஊடாக நோயாளர் நலன்கருதி அனைத்துப் பிரிவுகளும் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றமையை மனம் திறந்து பாராட்டியதுடன் எமது வைத்திய அத்தியட்சகரின் தலைமைத்துவத்துக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
எமது வைத்தியசாலையின் அபிவிருத்தியில் கை கோர்க்கும் வகையில் தற்போது நிலவுகின்ற ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான தீர்வு மற்றும் சில புனரமைப்பு பணிகள் அபிவிருத்தி கட்டுமானங்களை செய்துதருதல் போன்ற விடயங்களை சாதகமாக பரிசீலித்தார். இனிவரும் காலங்களில் இதற்கான செயற்படுத்தற் பணிகள் ஆரம்பமாகும் எனவும் தெரிவித்திருந்தார். வேலைப்பளுக்களுக்கு மத்தியில்
குறுகிய காலத்தில் இரண்டாவது தடவையாக எமது வைத்தியசாலைக்கு வருகைதந்து பிரிவுகளை பார்வையிட்டு வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு அவற்றை செயற்படுத்துவதற்கு ஆவலாக இருக்கும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களுக்கு வைத்தியசாலை சமுகம் சார்பாக எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வைத்தியசாலை அபிவிருத்திக்கு அனைவரும் கை கோர்ப்போம்.

என்று வைத்தியசாலையின் முகநூலில் செய்தி வெளியாகியுள்ளது.

இது சம்பந்தமாக பொதுமக்களும் பொதுஅமைப்புக்களுமாகிய நாம் கோரும் விடயம் யாதெனின்

1. தகுதியற்ற பதில் வைத்திய அத்தியட்சகரே உலகில் பிழைப்பு நடத்தும் போலி வைத்தியர்கள் போன்று வைத்தியர் கமலநாதனும் ஓர் நிர்வாக போலி வைத்தியரே என்பதை மறந்து விடவேண்டாம். மக்கள் அனைவரும் ஒரே குரலில் வெளியேறி பழைய நிரந்தர வைத்தியர் த.குகதாசனை மீண்டும் வைத்தியசாலை அத்தியட்சகராக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்தும் அது சம்மபந்தமாக நீர் எந்த ஒரு கோரிக்கையையும் இன்று விஐயம் செய்த கௌரவ அங்கஐன் இராமநாதன் அவர்களிடம் கோரவில்லை. இதில் இருந்து நீர் மக்களின் கோரிக்கையை புறக்கணிப்பது வெட்ட வெளிச்சமாகப் புலப்படுகிறது.
2. குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாக கௌரவ அங்கஜன் இராமநாதன் விஐயம் செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக உண்மையான விடயத்தினை இன்று மக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
வைத்தியசாலையில் இயங்கும் கழிவுகளை எரியூட்டும் அவ் இயந்திர தொகுதி நல்ல முறையில் இயங்கி வந்தது.
நீண்டகாலமாக எந்த ஒரு மக்கள் எதிர்ப்பும் இருக்கவில்லை.
வைத்தியர் வே. கமலநாதன் வரணியில் இருந்து இடமாற்றம் பெற்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்த பின்பு அயலில் உள்ள மக்களை தூண்டி  இந்த இயந்திர தொகுதியை அகற்றுவதற்கு முக்கிய சூத்திரதாரியாகச் செயற்பட்டார்.
உண்மை ஒரு நாள் வெளிவரும் இது சம்மபந்தமாக மாகாண சுகாதார பணிப்பாளர் அவர்கள் மக்களுடன் கதைத்து ஒரு சுமுகமான நிலையை உருவாக்கி மக்களை சமாதானப்படுத்தி கொழும்பில் இருந்து அது சம்பந்தமான உபகரணங்கள் மற்றும் தொழில் நுட்பக் குழு வைத்தியசாலைக்கு வருகை தந்த போதும் மக்களை மீண்டும் தூண்டி அவ்வியந்திரத் தொகுதியை திருத்தவிடாது நாடகம் போட்டு . மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் அவர்களை பெரும் சங்கடமான நிலைக்கு உருவாக்கி நிர்வாக செயற்பாட்டையே குழப்பிய நபர் வைத்தியர் வே. கமலநாதன் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் .
இது சம்மபந்தமாகதான் கௌரவ அங்கஜயன் இராமநாதன் அவர்களை முதலில் கூட்டி வைத்தியசாலையில் வைத்தியசாலை நிர்வாக செயற்பாட்டை குழப்புவதற்கு வைத்தியர் கமலநாதன் செய்த நடவடடிக்கையின் காரணமாக  வடமராட்சி பகுதியில் கௌரவ அங்கஜயன் இராமநாதன் அவர்களின் ஆதரவாளர்களில் சரிவு ஏற்பட்டது.
இப்பொழுது மக்கள் கோரிக்கையை புறக்கணித்து வைத்தியர் வே. கமலநாதனை மீண்டும் கௌரவ அங்கஜன் அவர்கள் ஆதரிப்பார்களாயின் மீண்டும் பாரிய சரிவை கௌரவ அங்கஜன் எதிர்கொள்ள வேண்டி எற்படும்.

3. வைத்தியசாலை முகநூலில் வெளியிட்ட மேல் உள்ள பதிவுக்கு கருத்துக்களை போட்ட பொது மகனை  அவ் முகநூலில் இருந்து அகற்றியது வைத்தியர் கலநாதனின் ஜனநாயகமா மக்கள் குறையை கேட்கக் கூடாதா? இதில் இவரின் சர்வாதிகார செயற்பாடு வெளிப்படுகிறது.

4. கடந்த 20.12.2020. அன்று நோயாளர் நலன்புரிச்சங்க கூட்டத்தில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் புதிய வைத்தியசாலை திட்டங்கள் நடைமுறையில் உள்ள திட்டம் அடுத்த வருடம் முடிவடையும் திட்டம் என்பவற்றைக் குறிப்பிட்டிருந்தார்.
அப்படியாயின் ஏன் நிர்வாக தகுதியற்ற போலி நிர்வாக வைத்தியர் வே.கமலநாதன்; இவ்வளவு பணத்;;தினை 4 கோடி 70 லட்சம் ரூபாவினை உள்நாட்டு வெளிநாட்டு மக்களிடம் வாங்கி மண்ணாக்கினார். மக்கள் இந்த கொரோனா நேரத்தில் எந்தவொரு வருமானங்களும் இல்லாமல் இருக்கும் போது.
உங்கள் தனியார் வைத்தியசாலையில் வருமானம் வரவில்லை என்றால் உழைப்பதற்கு இதுவா பாதை மக்கள் பணத்தைச் சூறையாடிய நபர்களின் பெயர் அடுத்து வரும் வாரங்களில் வெளியிடுவோம்.
வைத்தியசாலை மண் கல்லு 17 லொறிகளில் வரணிப்பகுதிக்கு வைத்திய கலாநிதியின் சின்ன வீட்டுக்கு அனுப்பிய விடயத்தினை மாகாண கணக்காய்வு நிறுவனம் உடன் ஆய்வு செய்ய வேண்டும். அத்துடன் வைத்தியசாலை கல்லு மற்றும் மண்ணை அபிவிருத்தியில் பயன்படுத்தி மக்கள் கொடுத்த நன்கொடைப் பணத்திற்கு கணக்கு காட்டியது.

5. நாட்டில் ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான சூழ் நிலையிலும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு கல்முனை வைத்தியசாலையைப் பார்வையிடச் சென்று. அங்கு வைத்தியர்களும் கூட சென்ற வைத்தியசாலை ஊழியர்களும் ஆடிய கூத்து சொல்லவா வேணும். இதை படத்துடன் வெளியிடுவோம்.

செல்லும் வழியெல்லாம் 10 நிமிடத்துக்கு ஒருமுறை வைத்தியர் கமலநாதன் ஒரு பெண் முகாமைத்துவ உதவியாளரின் உணவு விருப்பத்திற்கு அனைவருக்கும் அபிவிருத்திப் பணத்தில் உணவு வாங்கி திணித்தது . இரவு முழுவதும் வைத்தியர்கள் வைத்தியசாலை இருபால் ஊழியர்களும் தண்ணீயில் (குடிபோதையில்) மிதந்தது மக்கள் பணமே . இதுவா உனது நிர்வாக ஆளுமை .

6. வடமாகாணம் , இலங்கை நாடு முழுவதும் எல்லா இனமக்களும் மட்டுமல்லாது சர்வதேசமே மரியாதை கொடுக்கும் ஒரு மக்கள் சேவை மகேசன் சேவை என பணியாற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் அவர்களையே மக்களால் வெறுப்படைய வைக்கும் செயற்பாட்டில் வைத்தியர் கமலநாதன் செயற்படுகிறார். இது சென்ற வாரம் நெல்லியடி வர்த்தக சங்க பிரமுகர்களுக்கு எற்பட்ட மாதிரி அடுத்து வரும் மாதங்களில் மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கே நிச்சயம் வைத்தியர் கமலநாதனால் ஏற்படும். எனவே வெள்ளம் வரும் முன் அணைகட்ட வேண்டும்.

மக்கள் சமூகமாகிய நாம் அனைவரும் கேட்டுக்கொள்வது தயவு செய்து அரசியல் வாதிகளோ  அல்லது உயர் அதிகாரிகளோ இவருக்கு அதரவாகச் செயற்பட்டு மக்களின் எதிர்ப்பைச் சந்திக்கவேண்டாம்.

நன்றி
வடமராட்சி அபிவிருத்தியில் கைகோர்க்கும் அமைப்பு.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்