Thu. May 16th, 2024

வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு – பிரதேச செயலகங்களை வந்தடைந்தன காசோலைகள்!

அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசிப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சியின் பயனாக பாதிக்கப்பட்டவர்களுக்கான காசோலைகள் சம்மந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு வந்துசேர்ந்துள்ளன.

அதனடிப்படையில் யாழ். மாவட்டத்தினை சேர்ந்த 2155 வாழைப் பயர்ச்செய்கயாளர்களுக்கு சுமார் 25.5 மில்லியன் ரூபாய்களும், 47 பப்பாசி செய்கையாளர்களுக்கு சுமார் 3 இலட்சம ரூபாய்களும் விரைவில் வழங்கி வைக்கப்படவுள்ளது.
கடந்த வருடம் மே மாதம் வீசிய அம்பன் புயல் காரணமாக யாழ்ப்பாணத்தில் விலிகாமம் கிழக்கு பிரதேச செயலகங்களிற்குட்பட்ட அச்செழு, சிறுப்பிட்டி,நீர்வேலி பிரதேசங்களிற்கும் , வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு பிரதேச செயலகங்களிற்கும் இடங்களில் இருந்த பப்பாசி மற்றும் வாழை தோட்டங்கள சுமார் 500 ஏக்கர் அழிவடைந்திருந்தன.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று அழிவுகளை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதிகாரிகள் மூலம் அழிவுகளுக்கான மதிப்பீட்டு அறிக்கையினை பெற்று அதனை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.

இதனையடுத்து ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய குறித்த விடயம் தொடர்பாக விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்து.

இதன்பயனாக தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கான காசோலைகள் பிரதேச செயலகங்களுக்கு வந்தடைந்துள்ளமையை பிரதேச செயலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்