Tue. May 21st, 2024

வாக்களிப்பு முறமைக்கு மாற்றாக புள்ளியிடல் முறமை!

பல்கலைகழக துணைவேந்தா் தொிவிற்கு வாக்களிப்பு முறமைக்கு பதிலாக புள்ளியிடல் முறமையினை நடைமுறைப்படுத்த சிபாா்சு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களின் துணை வேந்தா் தெரிவிற்காக பீடாதிபதிகள் மற்றும் பேரவை உறுப்பினர்கள் வாக்களித்து முதல் மூன்று பேரில் ஒருவரை

ஜனாதிபதி தேர்வு செய்யும் முறமையின்போது தனிப்பட்ட விருப்பு அல்லது அரசியல் விருப்பு முக்கியத்துவம் பெறுவதாக சுட்டிக் காட்டப்பட்டது.

இதன் காரணமாக குறித்த தேர்வு முறைக்கு பதிலாக புதிய முறமை ஒன்றை பரிந்துரைக்க ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

இவ்வாறு நியமிக்கப்பட்ட குழு இருதடவைகள் கூடி ஆராய்ந நிலையில் அவர்களின் அறிக்கை இறுதி வடிவத்தினை எட்டியுள்ளது.

இதன்படி துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் தமது தகமைகள், பணிகள் தொடர்பில் அனைவர் முன்பாகவும் விளக்கமளிக்க வேண்டும்.

அவ்வாறு விண்ணப்பிப்பவா்களின் தகமை மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட புள்ளியின் அடிப்படையில் முன்னுரிமையில் உள்ளவர்களில்

மூவரே ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்படவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்