Tue. May 21st, 2024

இலங்கையில் 1வது தனிமைப்படுத்தல் வைத்தியசாலை உருவாக்கப்பட்டது!

ஈரான், தென்கொாியா, இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து வருகைதரும் பயணிகளை 14 நாட்கள் தனிப்படுத் தி கண்காணிப்பதற்காக தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளது,

ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலையே இவ்வாறு தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக மாற்றம் செய் யப்பட்டிருக்கின்றது.  கொரோனா வைரஸ் தொடர்பான தேசிய செயற்றிட்டம்

பாதுகாப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலை, தனிமைப்படுத்தி வைப்பதற்கான சிறந்த இடம் என

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார். இங்கு கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தங்கவைக்கப்படமாட்டார்கள் எனவும்,

கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டியவர்கள் மாத்திரமே இங்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்