Tue. May 21st, 2024

வடக்கில் 1375 குடும்பங்களுக்கு புதிய வீட்டுத்திட்டம்! கண்காணிப்பு பொறுப்பு மாகாண அதிகாாிகளிடம்.

வடமாகாணத்தில் மாவட்ட செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் வீட்டுத்திட்ட பணிகளை மாகாணசபை அதிகாாிகள் ஊடாக கண்காணிப்பதற்கு ஆளுநா் ஒழுங்கு செய்துள்ளாா்.

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டச் செயலகங்களிற்கும் ஏற்கனவே சமூகவலுவூட்டல் அமைச்சின் ஊடாக 550 வீடுகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆளுநரின் கோரிக்கையின் பெயரில்

மேலும் 825 வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுமதிக்கப்பட்ட ஆயிரத்து 375 வீடுகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 540 வீடுகளும் , கிளிநொச்சி மாவட்டத்திற்கு 265 வீடுகளும் ,

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 235 வீடுகளும் , மன்னார் மாவட்டத்திற்கு 160 வீடுகளும் , வவுனியா மாவட்டத்திற்கு 175 வீடுகளுமாகவே குறித்த ஆயிரத்து 375 வீடுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம் குறித்த எண்ணிக்கையான குடும்பங்களில் வீட்டுத் திட்டம் பெறத் தகுதியுடைய தேவையுடையவர்களின் பட்டியலை 5 நாட்களிற்குள் எமக்கு அனுப்பி வைக்குமாறு

வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் வடக்கின் 5 மாவட்டச் செயலாளர்களிற்கும் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். இதேநேரம் குறித்த பயணாளிகள் தெரிவு

முதல் திட்டச் செயல்பாடுவரையில் இம்முறை மாகாண அதிகாரிகளும் மேற்பார்வை செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்