Tue. May 21st, 2024

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 15 கிலோ தங்கம் தமிழகத்தில் மீட்பு, இரு கடத்தல்காரா்கள் கைது.

தமிழகம் வேதாளை கடல்வழியாக இலங்கையிலிருந்து தங்கம் கடத்திய இருவா் கைது செய்யப்பட்டிருப்பதுடன், 15 கிலோ தங்கத்தை இந்திய சுங்க வருவாய்துறை அதிகாாிகள் மீட்டுள்ளனா்.

இலங்கையில் இருந்து கடல் வழியாக படகில் தங்கம் கடத்தி வருவதாக இந்திய மத்திய சுங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம்

மண்டபம் வேதாளை கடற்பகுதியை கண்காணித்துக் கொண்டிருந்த போது அங்கு படகில் சென்ற மண்டபம் மரைக்காயர் பட்டினம் பகுதியை சேர்ந்த பரூக் மற்றும் ஆஷிக் ஆகிய இருவரை

சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் தகவல் வழங்குயுள்ளனர். இதனையடுத்து சந்தேகமடைந்த இந்திய சுங்கத்துறை அதிகாரிகள்

அவர்களை விசாரணை செய்ததில் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாகவும் அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்

தங்கத்தை கடலில் போட்டுவிட்டு குறிப்பிட்ட பகுதியை ஜிபிஎஸ் மார்க்கில் பதிவு செய்து கொண்டதாக தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் மீண்டும் ஆசிக், பரூக்

ஆகிய இருவரை மண்டபம் அழைத்து வந்த இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் இல் அழைத்துக்கொண்டு மணலி தீவு பகுதியில் போடப்பட்ட தங்கத்தை

இந்திய கடலோர காவல்படை கமாண்டர் உதவியுடன் கடலுக்குள் சென்று எடுத்துச் சென்றுள்ளனர். இதனை அடுத்து மீட்கப்பட்ட தங்கத்தை அளவிடும் போது 15 கிலோ இருந்ததாகவும்

இதன் இலங்கை மதிப்பு சுமார் 15 கோடி எனவும் தெரியவந்தது மேலும் கடத்தி சென்ற இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்