Fri. May 17th, 2024

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு விசேட விலையில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள்-ஜனாதிபதி

வருமானம் குறைந்த மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் தேசிய நிகழ்ச்சி திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

சமூர்த்தி உதவி பெறுவோர், சமூர்த்தி உதவி கிடைக்கப் பெறாதவர்கள், நிலையான தொழில் இல்லாதவர்கள், பெருந்தோட்டத் துறை தொழிலாளர்கள், தொழில் இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த அங்கவீனமுற்றோர், நிலையான வருமானம் இல்லாத முதியோர்கள் மற்றும் கடுமையான நோயாளிகள் உள்ள குடும்பங்கள் இந்த திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள். இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தகுதி பெறும் அனைவருக்கும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய விசேட இலத்திரனியல் அட்டையொன்று வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது..

அவர்களது உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

சீனி, தேயிலை, அரிசி, மா, பருப்பு, கடலை, வெங்காயம், மிளகாய், கருவாடு, கிழங்கு மற்றும் பால் மா உள்ளிட்ட அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை நிவாரண விலையில் வழங்கஉள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த உணவுப்பொருட்களை சதொச, கூட்டுறவு விற்பனை வலையமைப்பு மற்றும் குறிப்பாக கிராமிய பிரதேசங்களில் தெரிவுசெய்யப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட விற்பனை நிலையங்களின் ஊடாக கொள்வனவு செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்