Fri. May 17th, 2024

மிகவும் பழமைவாய்ந்த தெருமூடி மடம் இன்று திறந்து வைக்கப்பட்டது

இன்று 15.01.2019 அன்று பருத்தித்துறை தெரு மூடி மடம் திறப்பு விழா இடம்பெற்றது. பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் திரு பாலசுப்ரமணியன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வானது அருகில் உள்ள சிவன் கோவிலில் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தொல்வியில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் திருமதிவருணியும் சிறப்பு விருந்தினராக பருத்தித்துறை பிரதேச செயலர் சிறி மற்றும் யாழ் பல்கலைக்கழக தொல்பொருள் துறை பேராசிரியர்களான புஸ்பரட்ணம், கிருஷ்ணராஜா , வணக்கத்துக்குரிய சோமாஸ்கந்த குருக்கள் , பருத்தித்துறை பங்கு தந்தை யாவிஸ் அடிகளார் , காதர் , மற்றும் நகரசபை தவிசாளர் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையின் தனித்துவமான கட்டிட வடிவமைப்பினை உடைய ஒரே ஒரு மடம் ஆகும். இது 35 ஆடி நீளமும் 34 அடி அகலமும் கொண்டதாக பொழிந்த சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டுள்ளது. 16 தூண்கள் இரு புறமாகவும் 4 கல் அடுக்குகளின் மேற்பகுதியில் பொறுத்தப்பட்டு சுவரின் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது .
1940 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்கம் தொல்லியல் சட்டத்தின் பிரகாரம் இம்மடம் தொல்லியல் மரபுரிமை சின்னமாக பிரகடனப்படுத்தப்படுள்ளது .
இதன் கூரை 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலையில் தொல்லியல் திணைக்களத்தால் 2019 ஆம் ஆண்டு பருத்தித்துறை நகர அபிவிருத்தி சங்கம் -சுவிஸ் நிதியுதவியுடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்டு இன்று காலை திறந்து வைக்கப்பட்டது

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்