Thu. May 16th, 2024

வடமாகாணத்தில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இன்று  வெள்ளிக்கிழமை யாழ் மாவட்டத்தில் 41 பேர் உட்பட வடமாகாணத்தில்  80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்  ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீடத்தில் 1232 மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.  இதில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் 41 பேருக்கும்,  கிளிநொச்சி மாவட்டத்தில் 25 பேருக்கும் ,  முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பேருக்கும்,  வவுனியா மாவட்டத்தில் 6 பேருக்கும்,  மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும் என 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்  ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் 4 பேருக்கும்,  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 7 பேருக்கும்,  சங்கானையில் ஒருவருக்கும், மானிப்பாய் வைத்தியசாலையில் 3 பேருக்கும்,  சங்கானை சுகாதார பிரிவில் ஆயுர்வேத வைத்தியசாலை ஊழியர்கள் மூவருக்கும் தனியார் மருந்தக மூவருக்கும்,  வீதி வேலை செய்பவர் ஒருவர் உட்பட 10 பேருக்கும்,  உடுவில் சுகாதார பிரிவில் 5 பேருக்கும்,  காக்கைதீவு தொற்றாளருடன் நேரடித் தொடர்பு கொண்ட சண்டிலிப்பாய் சுகாதார பிரிவில் 4 பேருக்கும்,  கோப்பாய் சுகாதார பிரிவில் ஒருவருக்கும், கரவெட்டி சுகாதார பிரிவில் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இருவருக்கும்,  தருமபுரம் வைத்தியசாலையில் இருவருக்கும்,  பளை வைத்தியசாலையில் ஒருவருக்கும், பூநகரி வைத்தியசாலையில் ஒருவருக்கும், கிளிநொச்சி சுகாதார பிரிவில் 10 பேருக்கும்,  கண்டாவளை சுகாதார பிரிவில் 6 பேருக்கும் பூநகரி சுகாதார பிரிவில் மூவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் இருவருக்கும்,  புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நாலு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் வவுனியா வைத்தியசாலையில் 6 பேருக்கும்,  மன்னார் மாவட்டத்தில் மன்னார் வைத்தியசாலையில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்