Fri. May 17th, 2024

வடமாகாணத்தில் செயலாளர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

வடக்க மாகாணத்தில் வெற்றிடமுள்ள  நகர சபைகள், பிரதேச சபைகள்  என்பவற்றிற்கு உள்ளுராட்சி சபைகளில் கடமையாற்றும் உள்ளுராட்சி அலுவலா்களை  உடன் அமுலுக்கு  வரும் வகையில்  செயலாளா்களாக ( Council Secretaries) நியமிப்பதற்கு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய அரசின் மின்பிடித் துறை அமைச்சருமான  கே. என். டக்கிளஸ் தேவானந்தா விரைவில்  வடக்கு மாகாண  ஆளுநா்  திருமதி. பி.எஸ். எம்.சாா்ள்ஸ் அவா்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

உள்ளுராட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்.  மாவட்ட உள்ளுராட்சி அபிவிருத்திச் சபையின் தலைவா்  – செயலாளா்  யாழ். மாவட்ட ஈ.பி.டி.பி  சிரேஸ்ட அமைப்பாளா் சிவகுரு பாலகிருஸ்ணன் ஊடாக  சமா்ப்பித்த கோாிக்கைக்ககு  அமையவே விரைவில் அமைச்சரவை அமைச்சா் கே. என். டக்ளஸ் தேவானந்தா  வடக்கு ஆளுநா் ஊடாக செயலாளா் நியமனத்தை முன்னெடுக்கவுள்ளாா்.
கடந்த 07 வருடங்களுக்கு முன்னா் வடக்கு மாகாணத்தில்  அமைச்சா் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாா்சின்  போில்  முன்னாள் வடக்கு மாகாண ஆளுநா் ஜி.ஏ சந்திரசிறியால் நியமனம் பெற்று செயலாளா்களாக கடமையாற்றிய வேளையிலேயே  முதலமைச்சா்  விக்கினேஸ்வரனால் காரணமின்றி  பிரதம செயலாளா பத்திநாதனால் பதவி வெறிதாக்கப்பட்டனா்.
இவ்வாறு காரணமின்றி செயலாளா் பதவி வெறிதாக்கப்பட்ட   உள்ளுரட்சி உதவியாளா்களை (Local Govt. Assistants)  மீளவும் செயலாளா்களாக நியமனம் செய்யவே அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா  நடவடிக்கை எடுத்தள்ளதாக தொியவருகின்றது.
வடக்கு மாகாணத்தில் தற்போது செயலாளா்களாக கடமையாற்றும் 10 சுப்புறா தர அலுவலா்கள் தமக்கு இந்த  செயலாளா் பதவி வேண்டாம் எனவும் தமக்கு நிாவாக அலுவலா் பதவி போதுமானது என  பிரதம செயலாளருக்கு  கடிதம் வழங்கியுள்ளனா்.  எனினும் இந்த விடயம் இதுவரை வடக்கு மாகாண ஆளுநருக்கு தொியாது எனத் தொிவிக்கப்டுகின்றது.
இதேவேளை தற்போது மானிப்பாய் மற்றும் புநகாி பிரதேச சபைகளில் செயலாளா்  இன்றியே கடமை இடம்பெறுவதாக அதன் தவிசாளா்கள், உறுப்பினா்கள்  வடமாகாண ஆளுநாின் கவனத்திற்கு கடந்த மூன்று மாதங்களாக  தொடர்ந்து தொிவித்து இருந்தும் இந்த விடயத்தை ஆளுநா் மாகாண பொது சேவைகள் ஆணைக்குழுவின் தலைவா் சி.பத்மநாதனுக்கு  தொியப்படுத்தப்படவில்லையெனத் தொிவிக்கப்டுகின்றது.
தற்போது மிக வினைத்திறனாக கடமையாற்றக்க கூடிய உளு்ளுராட்சி உதவியாளா்கள் தரம்   I, இல் உள்ளவா்களையே செயலாளா் நியமனம் வழங்க  அமைச்சா் டக்ளஸ் நடவடிக்கை எடுத்து வருகிறதாக தொிவிக்கப்படுகின்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்