Tue. May 21st, 2024

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத்திடம்

இன்று வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது சபை தலைவர் தவிசாளர் ஐங்கரன் அவர்கள் சமர்ப்பித்தார் பொதுமக்களுக்கு நன்மை தரக்கூடிய பல திட்டங்களை சபையின் தவிசாளர் முன்மொழிந்தார். சபை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மக்களின் பார்வைக்காக இன்றிலிருந்து 14 நாளைக்கு நிகழ்ச்சிநிரல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்குரிய வரவுசெலவுத்திட்டம் வீதி புனரமைத்தல் மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்தல் கரவெட்டி பகுதியில் முன்பள்ளி அமைத்தல் வட்டார உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க கிராம வீதிகளுக்கு ஒளி அமைத்தல் போன்ற திட்டங்கள் இதில் அடங்கியுள்ளது

இவ்வளவு திட்டங்களையும் இன்று சபையில் தவிசாளர் அவர்கள் முன்மொழிந்தார் சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது

இதே நேரம் இன்று நடைபெற்ற வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் வரவு செலவு கூட்டத்தில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோத்தபய அவர்களுக்கு தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் தலைமையில் சபை உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்