Fri. May 17th, 2024

வடமராட்சியில் பாதுகாப்புடன் முன்பள்ளிகளை திறக்க ஏற்பாடு

கோவிட் 19 பாதுகாப்புடன் முன்பள்ளிகளைத் திறப்பது தொடர்பான வழிகாட்டுதல் செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை  பருத்தித்துறை கல்விவலயத்தில் முன்பள்ளி உதவிக் கல்விப் பணி்பாளர் தலைமையில் இடம்பெற்றது. இதில் பருத்தித்துறைப் பொதுசுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வினை நடாத்தினார்
கொரோனா தொற்று எந்த நேரத்திலும் எவரிடமிருந்தும் எமக்கு ஏற்டலாம். எனினும் ஆபத்தான சூழ்நிலையை அதிகரித்துச் செல்கிறது. இவ்வாறு ஆபத்தும் சவாலும் நிறைந்த சூழலிலேயே முன்பள்ளிகளை எதிர்காலத்தில் நடத்தவேண்டியுள்ளது. எனவே கைகளை அட்க்கடி சவர்க்காரமிட்டு கழுவுவது, மூக்கு, வாய் மூடி முகக்கவசம் அணிவது மற்றும் ஒருமீற்ரருக்கு குறையாத சமூக இடைவெளியப் பேணுவது என்பவற்றை தவறாது கடப்பிடிக்க வேண்டும். முன்பள்ளியில் மாணவர் பதிவேடு பேணுல் தனிமைப்டுத்தும் அறை பேணுதல் முக்கியமானது. எல்லா முன்பள்ளிகளும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்பு திறக்க வேண்டும். ஆசிரியர்களான நீங்கள் உங்களினதும் பிள்ளைகளினதும் பாதுகாப்பிற்க முக்கியத்துவமளித்து சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றியே கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முகக் கவசங்களை நாடியில் அணிதல், அருகில் சென்று உரையாடும்போது முகக்கவசத்தை விலக்கிவிட்டு உரையாடுதல் என்பன மிகவும் ஆபத்தான செயற்பாடுகளாகும். முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து சரியாக கடைப்பிடிப்பதே இந்த நோயின் பரவலிலிருந்து எம்மை பாதுகாக்கும் என்றார். இந்த செயலமர்வு பருத்தித்துறை கல்வி வலயத்திக்குட்பட்ட ஐம்பது வரையான முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்