Thu. May 16th, 2024

யாழ் நகரில் இடம்பெற்ற திருட்டு தொடர்பாக 8 பேர் கைது

யாழ்ப்பாணம் மாநகரில் வெவ்வேறு இடங்களில் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களை திருடியமை மற்றும் திருடப்பட்ட பொருட்களை வாங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பொம்மைவெளி நாவாந்துறை மற்றும் கஸ்தூரியார் வீதி ஆகிய இடங்களைச் சேர்ந்த எட்டு சந்தேக நபர்களை நேற்று போலீசார்  கைது செய்தனர். யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள காணியில் நகர அபிவிருத்தி அதிகார சபை கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. அந்த பணிகள்  தற்பொழுது உள்ள  நடைமுறையால் இடை நிறுத்தப்பட்ட நிலையில் அங்கு காணப்பட்ட கட்டிடப் பொருட்கள் உள்ளிட்ட ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டன என்று யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் யாழ்ப்பாண மாநகர மத்திய வர்த்தக நிலையம் இரண்டில் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன என்று பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டும் இருந்தது. இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிசார் விசாரணையை முன்னெடுத்த நிலையில் எட்டு சந்தேக நபர்களை கைது செய்து உள்ளார்கள். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் அனைவரும் யாழ்பாணநீதிமன்றத்தில் முற்படுத்தபடுவர்கள் என்று போலீசார் கூறினார்கள்.  யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி என் எம்.எம் .ஆர்.சி. முனசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சமரக்கோன் மற்றும் கவியரசன். ரஞ்சித். இங்ஸ்லி.மரியசிறி.உபாலி.ரத்நாயக்க. சுரேகா. உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தஎட்டு பேரையும் கைது செய்துள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்