Wed. May 15th, 2024

மாவட்ட செயலகத்தில் உரிய முறைப்படி பதிவு செய்துள்ள வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி

மாவட்ட செயலகத்தில் உரிய முறைப்படி பதிவு செய்துள்ள வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அவர்களை அனுப்பி வைக்கவேண்டிய அவசியம் உள்ளமையினால் ஒழுங்கு செய்து வருகின்றோம். வேறு எவரும் வெளிமாவட்டம் செல்ல அனுமதி இல்லை. எனத் தெரிவித்தார் அரச அதிபர் மகேசன்

இன்றைய தினம்  (27.04.2020) யாழ்ப்பாணம் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மருத்துவ சான்றிதழ் பெறச்சென்ற ஆசிரியை ஒருவர் தாம் குடும்பத்துடன் இன்றைய தினமே தனது வசிப்பிடமான வவுனியா செல்வதற்கு முயற்சி செய்துள்ளார். அந்தவகையில் அரச அதிபரின் அனுமதி பெறும் பொருட்டு மாவட்டச் செயலகம் சென்றபோது இங்கு எந்த பதிவு நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை. அரச அதிபரை சந்திக்க முடியாது என காவலாளிகள் கூறி திருப்பியனுப்பும் அதே வேளை குறித்த நபர் பிறிதாளர்களின் விண்ணப்பங்களை பெற்று அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் அரச அதிபரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் மிக அத்தியவசியசேவைகளின் பொருட்டு அனுமதிக்கப் பட்டவர்களுக்கே அனுமதி வழங்கப் பட்டது. ஏனையவர்களுக்கு நாளை (28.04.2020) செவ்வாய்க்கிழமை வழங்கப்படும். குறிப்பாக. சொந்த இடங்களை சேர்ந்த பதிவு செய்யப்பட்ட வெளிமாவட்டங்களில் வசிப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தவிர எக்காரணம் கொண்டும்  உறவினர்களை சந்திக்கவும் வேறு தேவைகள் கருதியும் எவரும் வெளிச்செல்ல அனுமதி இல்லை. என்றார்.

தமது சொந்த இடங்களுக்கு செல்ல பதிவுசெய்யப்பட்ட5000 பேரில் 2000பேர் தமது சொந்த இடம் திரும்பியுள்ளனர்.  குறித்த ஆசிரியக் குடும்பத்தினர் கடந்த 14.03.2020 அன்று குடும்பத்தினருடன் யாழ் வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வெளிச்செல்லமுடியாத நிலை ஏற்பட்டது என்றும் இவர் கடந்த 20.04.2020 அன்று ஊரடங்கு தளர்த்திய போது வவுனியா வுக்கு பயணிக்கையில்  அரச அதிபர் அனுமதி  மற்றும் மருத்துவ சான்றிதழ் எதுவும் அற்ற நிலையில் ஆனையிறவு சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டமையும் தெரியவருகின்றது.  எனவே   அநாவசியமாக வெளிமாவட்டம் செல்வதனையோ பதிவுகளின்றி வெளிமாவட்டம் செல்வதனையோ மக்கள் தவிர்க்க வேண்டும். இக் கொரோனா காலத்தில் நம்மை நாம் பாதுகாக்கவேண்டியது அவசியம் என்பதனையும் சமூகம் உணர வேண்டும் என நலன்விரும்பிகள் கருத்துத் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்