Sun. May 19th, 2024

யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கு அருகில் அதிபா் நியமனம் வேண்டும்! 60 அதிபா்கள் நியமனம், 30 அதிபா்கள் கடமைக்கு செல்லவில்லை.

கடந்த 10ம் திகதி வடமாகாண கல்வி அமைச்சின் ஊடாக அதிபா் நியமனம் பெற்றுள்ள 60 புதிய அதிபா்களில் 30 போ் இன்றுவரை கடமைகளை பொறுப்பேற் கவில்லை. என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் நிலவும் அதிபர் வெற்றிடங்களிற்காக இடம்பெற்ற பரீட்சையில் தேர்ச்சி பெற்ற 60 பேரிற்கு அதிபரிற்கான நியமனம் வழங்கப்பட்ட நிலையில் அதிகமானோரிற்கு வன்னிப் பாடசாலைகளிற்கே நியமனம் கிடைத்தது.

இவ்வாறு வன்னிப் பகுதிக்கு நியமனம் வழங்கப்பட்ட அதிபர்களில் பலர் மேன்முறையீட்டுடன் இதுவரை கடமைகளை பொறுப்பேற்கவில்லை. இதேநேரம் நியமனம் வழங்கப்பட்ட தினத்தில் இருந்து

14 தினங்கள் வரையில் பணியினைப் பொறுப்பேற்க முடியும் என்றபோதும் ஏன் பணியினைப் பொறுப்பேற்கவில்லை என நியமனம் கிடைத்த அதிபர்களிடம் வினாவியபோது

தெரிந்தவர்களிற்கு யாழிலும் அண்மையிலும் நியமனம் வழங்கியபோதும் சிலரிற்கு நீண்ட தூரத்தில் நியமனம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். இவ்வாறு அதிபா்கள் கூறுவது தொடர்பில்

கல்வி அமைச்சின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது , எவரது உறவிற்கும் முன்னுரிமை வழங்கவில்லை. ஆனால் குடும்பநிலமை அல்லது உடல்நிலை கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கும்.

இதேநேரம் சிலர் பாதிக்கப்படுவதாக முறையிட்டாள் அது தொடர்பில் ஆராயப்படும் என்கின்றனா்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்