Sun. May 19th, 2024

மோசமாகும் யாழ் நிலைமை , 100 பேருக்கு தொற்று , அநேகமான சிறுவர்கள் அடையாளம்

இன்று யாழில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 100 பேர் கோரோனோ தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 52 தொற்றாளர்களும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 48பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகூட முடிவுகளின் அடிப்படையில்
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர்
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர்
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர்
மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 04 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 05 பேர்,

அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் 03 பேர்,

சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதே நேரம் யாழ்.பல்கலைக்கழக ஆயவுகூட முடிவுகளின் அடிப்படையில்

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 பேரும்,

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும்,

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும்,

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும்,

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும்,

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கரவெட்டி சுகாதாரபிரிவில் அதிகமான தொற்று(39) காணப்படுள்ளதுடன், இன்றய தினம் அநேகமான சிறுவர்கள் கோரோனோ தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்