Fri. May 17th, 2024

மைக்கல் நேசக்கரம் ஊடாக போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு வாழ்வாதார உதவியாக ரூபா 171,000 நிதி வழங்கி வைப்பு

மைக்கல் நேசக்கரம் ஊடாக போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு வாழ்வாதார உதவியாக ரூபா 171,000 நிதி இன்று சனிக்கிழமை  வழங்கி வழங்கி வைக்கப்பட்டது.
யாருமற்ற இடத்தில் நான்கு  பிள்ளைகளுடன் தனியனே துன்பப்படும் தாயின் அவலம்
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் கணவர் உயிரிழந்த நிலையில்  நான்கு பிள்ளைகளுடன் வறுமையில் வசித்து வரும் குடும்பத்தினருக்கு இன்று ஒரு லட்சம் ரூபா நிதி வழங்கி வைக்கப்பட்டது. 2015 ம் ஆண்டு கணவர் சிறுநீராக நோய் காரணமாக உயிரிழந்தார் மூன்று பெண் பிள்ளையும் ஒரு ஆண் பிள்ளையுடன் பாதுகாப்பு அற்ற நிலையில் அடிப்படை வசதிகூட இன்றி தனி குடுப்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் மூத்த மகள் 17 வயது வறுமை காரணமாக கல்வியை இடைநிறுத்தி விட்டு கூலி  வேலைக்கு  சென்று வருகினறார்.
ஏனைய மூன்று பிள்ளைகளும்  கல்வி கற்று வருகின்றனர். வீட்டில் ஒரு துவிச்சக்கர வண்டி கூட இல்லை ஒரு  வேளை உணவுக்கு கூட மிகவும் கஷ்ட்டத்தை அனுபவித்து வந்த குடும்பத்தினருக்கு உதவி செய்யுமாறு மைக்கல் நேசக்கரம் கோரியிருந்த நிலையில் இன்று 24-11-2019 சனிக்கிழமை காலை 11-00 மணியளவில் மைக்கல் நேசக்கர ஒருங்கிணைப்பாளர்  கணபதிப்பிள்ளை கணேசலிங்கம் வழங்கிய நிதியில் இருந்து ரூபா 100,000  வழங்கி வைக்கப்பட்டது .
இதே போல் தாய் இறந்துள்ள நிலையில் அந்த மரண நிகழ்வுக்குச் சிறையிலிருந்து வந்திருந்த ஆனந்த சுதாகரனோடு அந்தக் குழந்தையும் சிறைக்கு செல்ல விரும்பியது. துணைக்கு யாருமே அற்ற அந்தக் குழந்தையின் நிலை கண்டு நாடே பதறியது. பொது மன்னிப்பு வழங்கும்படி மக்கள் கையெழுத்திட்டு கோரினர். ஆனால், இது எதையும் அதிபர் மைத்திரி பொருட்படுத்தவில்லை.
இனத்தீவிரவாதி ஞானசாரவை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்தார். வெளிநாட்டுப் பெண்ணைக் கொலை செய்த ஜூட் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டார். ஆனபோதும், இந்த ஆதரவற்ற இந்தச் சிறு குழந்தையின் தந்தை விடுதலை செய்யப்படவே இல்லை அவர்களின் குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் உள்ளது இரு பிள்ளைகளும்  வயதான அம்மம்மாவுடன் வாழ்ந்து வருகின்றனர் அவர்களின் கல்வி செலவுக்கு மாதாந்தம் ரூபா 4000 வீதம் இன்று 24-11-2019 சனிக்கிழமை காலை 11-00 மணியளவில் கனடா நாட்டில்வாழ்ந்து வரும் திருமதி மதியழகன் வழங்கிய நிதியில் இரு மாதங்களுக்கான   ரூபா 8000 வழங்கி வைக்கப்பட்டது அத்துடன் மகளுக்கு துவிச்சக்கர வண்டி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது இராசதுரை குடும்பம் வழங்கிய நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டது.
வசாவிளான் கிழக்கு பகுதியில் வசித்துவரும் முன்னாள் போராளிகளான அமலதாஸ் ரவிச்சந்திரன் அவருடைய மனைவி ரவிச்சந்திரன் சிவனேஸ்வரி இருவரும் முன்னாள் போராளிகள் யுத்தத்தின் போது படுகாயம் அடைந்து உடலில் முழுவதும்  காயத்தின் வடுக்கள் உள்ளனர்  இவர்களினால் கஷ்டமான  எந்த தொழில் செய்யமுடியாது என தெரிவிக்கப்படுகின்றது இவர்களின் மகன் ஒருவர் யுத்தத்தின் போது உயிரிழந்துள்ளார் இந்நிலையில் இவர்களின் வாழ்வாதாரத்துகு உதவி செய்யுமாறு கோரியுள்ளனார்
அதற்கு அமைவாக இன்று 24-11-2019 சனிக்கிழமை காலை 11-00 மணியளவில் அமரா் மார்க்கண்டி துரைராசா அவர்களின் 31 வது நினைவு தினம் இன்றாகும் அவரின் குடும்பம் வழங்கிய நிதியில் இருந்து ரூபா 25,000 இன்று வழங்கி வைக்கப்பட்டது .
மூங்கிலாறு உடையார்கட்டு பிரதேசத்தில் வசிக்கும் ராஜேஸ்வரி என்பவர் ஓர் முன்னாள் போராளி. இவரது கணவர் முன்னாள் போராளியாக இருந்து காணாமலாக்கபட்டுள்ளார். தற்போது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். தரம் 10 மற்றும் தரம் 7 வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரும் உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று வருகிறார்கள். இவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு போக்குவரத்து வசதி இன்றி நடந்து சென்றே வருகிறார்கள். தாயார் பசு மாடு வளர்ப்பினை மேற்’கொண்டு அதிலிருந்து கிடைக்கும் வருமானத்திலேயே தமது அன்றாட வாழ்க்கைச்செலவுகளை ஈடுசெய்கிறார்கள். அந்த வருமானம் அவர்களுக்கு போதுமானதாக இல்லாததால் பிள்ளைகளுக்கு தேவையான கல்வி போக்குவரத்துக்கான உதவியினை கோரியுள்ளார் அதற்கு அமைவாக கனடா நாட்டில் வாழ்ந்து வரும் திருமதி மதியழகன் சுபாசினி அவர்கள் வழங்கிய நிதியில் இருந்து மாதாந்தம் ரூபா 4000 வீதம் இரு மாதங்களுக்கான ரூபா 8000 வழங்கி வைக்கப்பட்டது  கடந்த 22-10-2019 அன்று ஒரு துவிச்சக்கர வண்டி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .
முல்லைத்தீவு பகுதியில் வசித்துவரும் தம்பதிகள் இருவரும் முன்னாள் போராளிகள் கணவருக்கு யுத்தத்தின் போது உடலில் பல இடங்களில் காயம் ஒரு கண் பார்வை முற்றாக இழந்துள்ளார் எந்த தொழிலும் செய்யமுடியாமல் வீட்டில் உள்ளர் மாதம் இரு முறை கண்டி வைத்திய சாலைக்கு கண் சிகிச்சை பெற சென்று வர வேண்டியுள்ளது இரு பிள்ளைகள் உள்ளனர் மனைவி மட்டும் வீட்டு தோட்டம் செய்து அதில் கிடைக்கும் வருமானங்களை கொண்டு குடும்பத்தை நடத்தி வருகின்றார்   மகன் கல்வியில் சிறந்து விளங்கும் போது வறுமை காரணமாக தனியார் கல்வி நிலையத்திற்கு போகமுடியாமல் வீட்டில் உள்ளர்  அதற்கு அமைவாக இன்று 24-11-2019 சனிக்கிழமை காலை 11-00 மணியளவில் கனடா நாட்டில் வாழ்ந்து வரும் திருமதி மதியழகன் சுபாசினி அவர்கள் வழங்கிய நிதியில் இருந்து அவருக்கு கல்வி செலவுக்கு மாதாந்தம் ரூபா 4000 வீதம் இரு மாதங்களுக்கான ரூபா 8000 வழங்கி வைக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்