Tue. May 21st, 2024

தமிழ் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் கல்விச் செலவை பொறுப்பேற்றது மைக்கல் நேசக்கரம் 

தமிழ் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளுக்கான கல்விச் செலவை மைக்கல் நேசக்கரம் பொறுப்பேற்றமையை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.
தாய் இறந்துள்ள நிலையில் அந்த மரண நிகழ்வுக்குச் சிறையிலிருந்து வந்திருந்த (தந்தை) ஆனந்த சுதாகரனோடு அந்தக் குழந்தையும் சிறைக்கு செல்ல விரும்பியது.
துணைக்கு யாருமே அற்ற அந்தக் குழந்தையின் நிலை கண்டு நாடே பதறியது. பொது மன்னிப்பு வழங்கும்படி மக்கள் கையெழுத்திட்டு கோரினர். ஆனால், இது எதையும் அரச தலைவர்  மைத்திரி பால சிறிசேனா பொருட்படுத்தவில்லை.
ஞானசாரவை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்தார். வெளிநாட்டுப் பெண்ணைக் கொலை செய்த ஜூட் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டார்.
 ஆனபோதும், இந்த ஆதரவற்ற இந்தச் சிறு குழந்தையின் தந்தை விடுதலை செய்யப்படவே இல்லை அவர்களின் குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் தற்போதும்  உள்ளது
 இரு பிள்ளைகளும்  வயதான அம்மம்மாவுடன் மிகவும் வறுமையான நிலையில்  ஒரு வேளை உணவு கூட சில வேளை இன்றி  வாழ்ந்து வருகின்றனர்
அவர்களின் கல்வி செலவுக்கு மாதாந்தம் ரூபா 4000 வீதம் இன்று 24-11-2019 சனிக்கிழமை காலை 11-00 மணியளவில் கனடா நாட்டில்வாழ்ந்து வரும் திருமதி மதியழகன் சுபாசினி வழங்கிய நிதியில் இரு மாதங்களுக்கான   ரூபா 8500 வழங்கி வைக்கப்பட்டது
அத்துடன் அவரின்  மகளுக்கு இராசதுரை குடும்பம் வழங்கிய நிதியில் இருந்து துவிச்சக்கர வண்டி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது பிள்ளைகளின் கல்வி செலவுக்கு மைக்கல் நேசக்கரம் ஊடாக தொடர்ச்சியாக உதவிகள் வழங்கி வைக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்