Tue. May 21st, 2024

மைக்கல் நேசக்கரம் ஊடாக பேரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு வாழ்வாதார உதவியாக ரூபா 151,000 வழங்கி வைப்பு

மைக்கல் நேசக்கரம் ஊடாக பேரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு வாழ்வாதார உதவியாக ரூபா 151,000 வழங்கி வைப்பு

1]
அவசர உதவி கோரல் கருணையுள்ளம் கொண்டவர்கள் உதவிக்கரம் நீட்டுமாறு கோரிக்கை

மனநலம் பாதிக்கப்பட்ட கணவர் கோமா நிலையில் உயிருக்கு போராடும் மகனுடன் பால்மாவுக்கு கூட பணம் இன்றி வறுமையில் வாடும் குடும்பம்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசித்து வரும் இம்மாணவன் ஆறுமாதங்களுக்கு முன்னர் வீதி விபத்தொன்றில் சிக்கி தற்போது கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அவர் உயர்தரத்தில் கல்வி கற்று வந்த நிலயில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவரது குடும்பத்தில் மூத்த பிள்ளையாவார்.

இரண்டு சகோதரிகளும் ஒரு தம்பியும் கல்வி கற்று வருகிறார்கள். தந்தை மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வேலைகள் எதுவும் செய்ய முடியாத நிலையிலுள்ளார்.

தாயார் இவரை பராமரிப்பதில் உள்ளார். இதனால் குடும்பம் எந்தவொரு வருமானமும் இன்றி மிகவும் அல்லல்படுகிறது.

எனினும் அவற்றை கொள்வனவு செய்து வழங்குவதற்குரிய வசிதிகள் காணப்படவில்லை. தற்போது கால்கள் மட்டும் அசையக்கூடிய நிலையில் சத்துள்ள பானங்களை வழங்கினால் விரைவில் குணமாக முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.

ஏனைய குடும்பத்தில் உள்ளவர்களும் ஒருவேளை உணவிற்கு கூட வழியின்றி அவதிப்படுகிறார்கள். இவர்களது நிலமையினை அறிந்து தங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறு கோரியுள்ளனர்.
இவருக்கு 3000 பெறுமதியான பால்மா வழங்குமாறு வைத்தியர்கள் பணித்துள்ளார்கள். இதைவிட பழச்சாறுகள் வழங்கவும் கூறியுள்ளனர் அதற்கு அமைவாக அவசர நிதியாக சுப்பிரமணியம் சிவபாதம்( கனடா ) மற்றும் அமுர்தலிங்கம் செந்தில்ராஜா ( சுவிட்சர்லாந்து )தலா 50,000 வழங்கிய நிதியில் இருந்து இன்று 19-11-2019 செவ்வாய்க்கிழமை காலை 11-00 மணியளவில் முதல்கட்டமாக ரூபா 100,000 வழங்கி வைக்கப்பட்டது

2]
இறுதியுத்தத்தில் இரண்டு கால் பறிபோனது நான்கு பிள்ளைகளுடன் வறுமையில் வாடும் அவலம்

முல்லைதீவு பகுதியில் வசித்துவரும் மா – நாதன் முள்ளிவாய்கல் இறுதி யுத்தத்தில் 04-02-2009அன்று தனது இரண்டு காலினையும் இழந்தார் நான்கு பிள்ளைகளுடன் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வருகின்றார்

மனைவி கூலி வேலை செய்து தனியாகவே கணவர் மற்றும் பிள்ளைகளையும் வளர்த்து வருகிறார்.

மாதாந்தம் கிடைக்கும் பொதுசன உதவிக்கொடுப்பனவினையும் சமுர்த்தி கொடுப்பனவினையும் பெற்றே தமது செலவுகளை பூர்த்தி செய்கிறார்கள் .

பிள்ளைகள் பாடசாலைக்கு நடந்து சென்று கல்விகற்பதனால் அவர்களுக்கு கல்வி செலவுக்கு துவிச்சக்கரவண்டி ஒன்றினை வழங்கியுதவுமாறு கோரியுள்ளார்.

அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதால் அவர்களின் கல்விக்கான உதவியினையும் எதிர்பார்த்துள்ளார் அதற்கு அமைவாக இராசதுரை குடும்பம் வழங்கிய நிதியில் இருந்து வாழ்வாதார உதவியாக இன்று 19-11-2019 செவ்வாய்கிழமை காலை 11-00 மணியளவில் ரூபா 30,000 வழங்கி வைக்கப்பட்டது

3]
கொழும்பில் சந்திரசிகிச்சை மேற்கொள்ள பணம் இன்றி தவிக்கும் குடும்பம் பிறப்பில் இருந்து வாழ்வுக்காக போராடும் ஆண் குழந்தை

வடமராட்சியில் ஐந்து அங்கத்தவர்களை கொண்ட குடும்பம் இதில் மூன்று பிள்ளைகள் கடைசி மகன் பிறப்பில் இருந்து சுயமாக இயங்கமுடியாமல் தவிர்த்து வருகின்றார் அவரின் நோயைக் குணப்படுத்த கொழுப்பு வைத்தியசாலையில் தாங்கி இருந்து சந்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்

இவர்களின் குடும்ப சூழ்நிலையில் கொழும்புக்குகூட செல்லமுடியாமல் குடும்பம் கஷ்டநிலையில் உள்ளது கூலி வேலை செய்யும் வருமானத்தில் இவர்களின் குடும்பம் இயங்கிவருகின்றது சந்திரசிகிச்சையை விட
அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. வாரத்திற்கு ஒரு முறை யாழ்ப்பாணத்திற்கு சிகிச்சைக்காக முச்சக்கர வண்டியில் சென்று வருவதற்கும் இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை கொழும்புக்கு சிகிச்சைக்காக சென்று வருவதற்கான போக்குவரத்து செலவிற்காக உதவி கோரியுள்ளனர்.

இந்த ஆண் குழந்தை குணப்படுத்த கருணையுள்ளம் கொண்டவர்கள் உதவி செய்யுமாறு கோரியிருந்தனர் அதற்கு அமைவாக சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்துவரும் அமுர்தலிங்கம் செந்தில்ராஜா மற்றும் கணபதிப்பிள்ளை கணேசலிங்கம் வழங்கிய நிதியில் இருந்து ரூபா 21,000 மருந்துவ செலவு மற்றும் மூன்று சில் சிறு சைக்கிள் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்