Sun. May 19th, 2024

முல்லைத்தீவு மாவட்ட மாபெரும் மரதன் ஓட்ட முடிவுகள்

மாவட்ட விளையாட்டுத்துறையுடன் இணைந்து ஒழுங்குபடுத்தல்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் சகல பிரதேச வீரர்களையும் ஒருங்கிணைந்ததாக  நடத்திய மாபெரும்  ஆண்/பெண்களுக்கான மரதன்  ஓட்ட போட்டி கடந்த செவ்வாய்கிழமை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முன்னாள் தேசிய மரதன் ஓட்ட வீரரும், கனடா நாட்டில் வாழ்பவருமான  பத்மநாதன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் நடைபெற்ற ஆண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டியானது முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி முன்பாக
ஆரம்பித்து முள்ளியவளை முல்லைத்தீவு பிரதான வீதியூடாகச் சென்று முல்லைத்தீவு கொக்கிளாய் வீதி வழியாக அளம்பிலைச் சென்றடைந்து தொடர்ந்து அளம்பில் குமுழமுனை வீதிவழியாக குமுழமுனை மகாவித்தியாலயத்தின் முன்பாக நிறைவடைந்தது.
பெண்களுக்கான மரதன் ஓட்டமானது முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு முல்லைத்தீவு கொக்கிளாய் வீதி வழியாக அளம்பிலைச் சென்றடைந்து தொடர்ந்து அளம்பில் குமுழமுனை வீதிவழியாக குமுழமுனை மகாவித்தியாலயத்தின் முன்பாக நிறைவடைந்தது.
இந்த மரதன் ஓட்டப் போட்டியில் 192 வீரர்களும் , 60 வீராங்கனைகளும் கலந்துகொண்டனர். இதில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற இருபாலாருக்கும் பெறுமதியான தங்கப்பதக்கம் 10 வரை இடங்களைப் பெற்றவர்களுக்கு 7000/-ரூபாவும் போட்டியுநிறைவு செய்தசுமார் 200 பேர் வரையான  அணைவருக்கும் 5000/- வீதமும் சீருடையும் பத்மநாதன் அவர்கள் சொந்த நிதிமூலம்   வழங்கப்பட்டது.
ஆண்கள் பிரிவில்
1 ம் இடம் ஜெ.சுபராஜ் – கொக்குத்தொடுவாய்,
2ம் இடம் எஸ்.யாழ்மைந்தன் – வள்ளுவர்புரம் விசுவமடு,
3ம் இடம் எஸ். அகிலன் தியோநகர் சிலாவத்தை
பெண்கள் பிரிவில்
1ம் இடம் என்.கேமா – குரவயல் உடையார்கட்டு,
2ம் இடம் விதுசா – கெருடமடு மன்னாகண்டல்,
3ம் இடத்தினை
மாணிக்கபுரம் விசுவமடுவை சேர்ந்த ஏ.அபிநயா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்த மரதன் ஓட்ட ஆரம்ப நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் (நிர்வாகம் ) , மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் (காணி) , வைத்தியர் ஒட்டுசுட்டான் பிரதேச (MOH) திரு.சுதர்சன், பொலிஸார், பெருந்திரளான மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்