Sun. May 19th, 2024

முட்டி மோதிக்கொண்ட பிரதேச சபை உறுப்பினர்கள்

இன்று நடைபெற்றது வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி இருந்து வந்த பிரதேச சபை உறுப்பினருக்கும்  ஆளுங் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கூட்டம் முடியும் தருவாயில் வாக்குவாதம் முற்றி சபை அல்லோலபட்டது. கலைவாணி கம்பர்மலை சனசமுக நிலையத்தின் வருடாந்தம் கூட்டம் வைக்கப்படவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தவிசாளர் அவர் பதிலளிக்கும்போது விசாரனை முடிவடைந்ததும் கூட்டம் நடைபெறும் எனவும பதிலளித்தார். ஆனால் உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வட்டார உறுப்பினர் இருக்கும்போது போனஸ்  சீட்டில் 75 வாக்குகளை மட்டும் பெற்று வந்தவருக்கு கதைப்பதற்கு அனுமதியில்லை என்றும்  ஆனால் அவரும் வட்டார உறுப்பினர்களும் சேர்ந்து முடிவு எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. வீதிக்கு பெயர் வைப்பது என்றால் உள்ளுராட்சி ஆணையாளருடைய அனுமதி பெற்று தான் வைக்க முடியும் என்றும்,   19 ஆயிரத்துக்கு மேல் வாக்குகள் எடுத்தவர்கள் அமைதியாக இருக்கும்போது நீங்கள் ஏன் பிரச்சனையை உருவாக்குகிறீர்கள் எனவும் பலமுறை கூறினார். உறுப்பினர் அடிக்கடி எழுந்து தன்னுடைய வாதத்தை எடுத்து கூறியபடி இருந்தார். ஏனைய உறுப்பினர்களுக்கு சகிக்க முடியாத காரணத்தினால் தவிசாளரிடம்  கூட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க கூட்டம் முடிவடைந்தது என தவிசாளரால்  அறிவிக்கப்பட்டது

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்