Fri. May 17th, 2024

முகக் கவசம் அணியாத 50 பேருக்கு PCR

பருத்தித்துறையில் முகக்கவசம் சரியான முறையில் அணியாத 50 பேரை தனிமைப்படுத்தி பிசிஆர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச்சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்களால் முகக்கவசத்தை அணியாத மற்றும் முறையாக அணியாத பொதுமக்கள் மற்றும்  வர்த்தகர்களை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்த உள்ளதோடு பிசிஆர் பரிசோதனைகயைும் மேற்கொள்ளவுள்ளனர்.
இன்றையதினம் பருத்தித்துறை பொதுசுகாதார பரிசோதகர்கள் ஜென்சன் றொனால்ட் மற்றும் சுதாகரன் தலைமையில் பருத்தித்துறை பொலிஸார், கற்கோவளம் பிரிகேட் இராணுவத்தினர், கிராமசேவகர்கள்கள் இணைந்து கடும் பரிசோதனைகளை மேற்கொணனடனர்.
பருத்தித்துறை பஸ்நிலையம், கடைத்தொகுதிகள், மீன்சந்தை, அரச அரசசார்பற்ற நிறுவனங்கள், பொதுபோக்குவரத்து, கிராமக்கோட்டு சந்தி தம்பசிட்டிவீதி ,ஓடக்கரை என பல டங்களிலும் இப்பரிசோதனைகள் பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் சரியானவிதத்தில் முகக்கவசம் அணியாது மூக்கு வெளித்தெரியவும் நாடிகளிலும் அணிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
இனங்காணப்பட்டவர்கள் சுயதனிமைப்படுத்தல் மற்றும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு ஒத்துளைக்காவிடின் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய வகையான கொரேனா வைரஸ் வீரியமாகப்பரவுவதோடு காற்றில் ஒருமணிநேரம் நிலைத்திருக்கவும்கூடியது. இது தற்போது இளைஞர் குழந்தைகள் கர்ப்பிணிகளையும் அதிக தாக்கத்துக்கு உட்படுத்தி மரணங்களையும் ஏற்படுத்தி வருகிறது. சுகாதார பராமரிப்பு எல்லையை மீறாதவகையில் தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை மிக இறுக்கமாக பின்பற்ற முன்வருமாறும் அழைப்பு விடுக்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்