Wed. May 15th, 2024

மீண்டும் பாடசாலைகளுக்கான கல்வி அமைச்சின் அறிவித்தல்

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளை 2021 கல்வி ஆண்டுக்காக மீண்டும் ஆரம்பித்தல் தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில சீ.கே. பெரேரா அறிவித்துள்ளார்.

இதன்படி வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 20 ஆக இருப்பின் எல்லா நாட்களும், 21-40 ஆக இருப்பின் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு வாரம் விட்டு வாரமும், 40ற்கு மேற்படுமாயின் மாணவர்கள் 3 சம குழுக்களாக பிரிக்கப்பட்டு வகுப்புக்களை நடாத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்

2021 ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் பாடசாலைத் தவணைகளை முடிவுறுத்தல் தொடர்பாக எனது சமவிலக்கமும் 2021.11.26 திகதியும் கொண்ட கடிதம் தொடர்பானவை . அதன்படி 2021 க.பொ.த ( உயர்தர ) பரீட்சையின் பின்பு 2022.03.07 அன்றிலிருந்து மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது . அதில் மாணவர் எண்ணிக்கைக்கிணங்க கீழ்வருமாறு மாணவர்களை அழைக்க வேண்டியதோடு , பாடசாலைக்கு அழைக்கப்படாத மாணவர் குழுக்களுக்கு மாற்றுக் கல்வி முறைகளைப் பயன்படுத்தி உரிய பாடவிதானங்கள் நடாத்தப்பட வேண்டும் எனவும் தெருவிக்கின்றேன் . மேலும் கல்வி மற்றும் கல்விசாரா பணிக்குழுவினர் வழமைபோன்று சேவைக்குச் சமூகமளிக்க வேண்டுமெனவும் தெருவிக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்