Wed. May 15th, 2024

மீண்டும் காலநிலை எச்சரிக்கை ! 70 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம் !!

இலங்கையின் தென்மேற்கு பகுதியில் அதிக காற்று உடன் கூடிய மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக காலநிலை ஆய்வுநிலையம் தெரிவித்துள்ளது.

காற்றின் வேகம் தென் மாகாணத்தில் 70 கி.மீ வேகத்திலும் , மேற்கு, சபராகமுவா, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் (50-60) கி.மீ வேகத்திலும் , வட-மத்திய மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில்(40-50) கி.மீ வேகதிலும் இருக்கும் என்று அறிவிக்கப்படுகிறது .

கடற்கரயோரமாக இருப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மற்றய பகுதிகளில் உள்ளவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள.

மேற்கு, சபராகமுவா, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .

100 மிமீக்கு மேல் கனமான மழைவீழ்ச்சி சில இடங்களில் குறிப்பாக சபராகமுவா மற்றும் மத்திய மாகாணங்களில் இருக்கலாம் என்றும் அறிவிக்கப்படுகிறது .

மன்னார் மற்றும் அனுராதபுரா மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மதியம் 2.00 மணிக்குப் பிறகு அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வலுவான காற்று வீசலாம்.

மின்னல் தாக்கத்தில் இருந்து ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் தயவுசெய்து கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் காலநிலை ஆய்வு நிலையம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடல் பகுதிகளில் (70-80) கிமீ வரை காற்றின் வேகம் திடீரென அதிகரிப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும், மாத்தறையில் இருந்து பொட்டுவில் வரை கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.

மேற்கண்ட கடல் பகுதிகளுக்குள் செல்வது ஆபத்தானது என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது .

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்