Fri. May 17th, 2024

மின்பிறப்பாக்கி இயங்காததால் சத்திரசிகிச்சைகள் அரைகுறையில் முடக்கம் , மந்திகை வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் அவதி,

இன்று காலையில் மந்திகை ஆதார வைத்தியசாலை பகுதியில் மின்தடை ஏற்பட்டநிலையில் , மின் பிறப்பாக்கி உதவியுடன் வைத்திய சாலையின் செயல்பாடுகள் வழமைபோன்று இடம்பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மின் பிறப்பாக்கி 2 மணித்தியாலங்களுக்கு மேல் இயங்கவில்லை என்றும் இதனால் மந்திகை ஆதாரவைத்தியசாலையின் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கிப்போயிருந்தன.
சாத்திரசிகிச்சைகள் அனைத்தும் அரைகுறையாக முடங்கிய நிலையில் , சத்திரசிகிச்சைக்காக மயக்கமருந்து ஏற்றபட்டவர்கள், ஸ்கேன் போன்ற வற்றுக்காக தயார் நிலையில் இருந்தவர்கள் நோயாளர்கள் அனைவரும் பெரும் அவதிப்படவேண்டியிருந்ததாக தெரியவருகிறது.
இந்த நிலையில் சத்திரசிகிச்சைக்கு பொறுப்பாக இருந்த வைத்தியர் மின்பிறப்பாக்கிக்கு பொறுப்பானவர்களை அவசரமாக தொடர்பு கொண்டபொழுதும் அவர்கள் அசண்டையீனமாக இருந்ததாகவும் , இது போன்ற பிரச்சினைகளுக்கு தயார் நிலையில் இல்லாதிருந்ததாகவும் சம்பவத்தை நேரில் கணடவர்கள் கவலை வெளியிட்டார்கள்.
மந்திகை வைத்தியசாலையின் நிர்வாக குறைபாடுகள் தொடர்பாக நோயாளர்கள் பிரதேச மக்கள் மற்றும் நோயாளர்கள் குறைப்பட்டு கொண்டபொழுதும் , இது தொடர்பாக நிர்வாகம் எதுவித நடவடிக்கைகளும் எடுக்காது அசண்டையீனமாக இருப்பதாக வருத்தம் தெரிவித்தார்கள்.
எமது நியூஸ் தமிழ் இணையதளமும் நோயாளர் மற்றும் பிரதேச மக்கள் நலன் கருதி இது போன்ற நிர்வாக குறைபாடுகளை காலத்துக்கு காலம் எமது செய்தியாளர்கள் மற்றும் வாசகர்களின் உதவியுடன் வெளிகொண்டு வந்திருப்பினும் இது ஒரு முடிவில்லாத தொடர் கதையாகவுள்ளமை மிகவும் வருத்தத்துக்குரியதுடன்  மிகவும் கண்டிக்கத்தக்கது..

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்