Tue. May 14th, 2024

மறவன்புலோவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பு!! -பணிகள் துரிதகதியில்-

யாழ்ப்பாணம் மறவன்புலோவில் உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

யாழிலில் இருந்து 10 மெகாவோட்ஸ் மின்சாரத்தை காற்றாலை ஊடாக உற்பத்தி செய்வதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் 2020ஆம் ஆண்டு அரசு உடன்படிக்கை செய்திருந்தது.

மறவன்புலோவில் காற்றாலை மின் உற்பத்தி அமைக்கு பணிகள் கடந்த ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் உள்ளூர் மக்கள் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கையால் அந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் புதிய அரசு ஆட்சிக்கு வந்த நிலையில் மேற்படி திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் ஒன்றாக மறவன்புலோவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் பிரபல போக்குவரத்து நிறுவனமான நாமக்கல் போக்குவரத்து கம்பனியின் துணை நிறுவனமான என்ரிசி லோஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தால் காற்றாலை அமைப்பதற்கான உபகரணங்கள் யாழ்ப்பாணத்துக்கு ஏ-9 வீதி ஊடுhக கொண்டுவரப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்