Fri. May 17th, 2024

சுவிஸ் தூதரக பெண்ணின் 19 மணிநேர வாக்குமூலம்!! -நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு-

கடத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக பெண் பணியாளரிடம் 3 நாட்களாக நடத்திய விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 25ஆம் திகதி பணி முடிந்து வீடு திரும்பியபோது சிரியலதா என அழைக்கப்படும் கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ் என்ற உள்நாட்டு தூதரகப் பணியாளர் வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்ததுடன், நீதிமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டுசென்றிருந்தது.

நீதிமன்ற உத்தரவையடுத்து, குற்றப்புலனாய்வுப் பிரிவில் கடந்த ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய 3 நாட்களும் முன்னிலையாகிய சுவிஸ் தூதரக பணியாளரிடம் நீண்டநேர விசாரணைகள் நடத்தப்பட்டன.

19 மணி நேரம் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதுடன், சட்டமருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டு பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.

இவரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் மற்றும் சுவிஸ் தூதுவர் அளித்த முறைப்பாடு ஆகியன தொடர்பாக பகுப்பாய்வு செய்யும் குற்றப்புலனாய்வுப் பிரிவு, நாளை நீதிமன்றத்தில் அதுதொடர்பான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்