Thu. May 16th, 2024

மன்னார் மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளில் (எச்.என்.பி) H.N.B அசுரன்ஸ் மன்னார் கிளை

மன்னார் (எச்.என்.பி) H.N.B அசுரன்ஸ் கிளையின் முகாமையாளர் காப்புறுதி தொடர்பான உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்தாது சுய இலாபத்துக்கு என முடிவுறும் கப்புறுதிகளை காப்புறுதியாளர்களிடம் பொய்யான விடயங்களை கூறி கப்புறுதி வருடங்களை அதிகரித்து இலாபம் அடைவதாக பாதீக்கப்பட்டவர்கள் ஊடாக தெரிய வருகின்றது.
மேற்படி முகாமையாளர் தொடர்சியாக காப்புறுதி மேற்கொண்டவர்களின் வீடுகளுக்குச் சென்று கப்புறுதி பெறுதல், தொடர்பாக உள்ள உண்மை நடை முறைகளை மறைத்து புதிய நடை முறைகள் மேற்கொள்ள வேண்டும் என கோரி வீடுகளில் வைத்தே காப்புறுதியாளர்களிடம் கையொப்பங்களை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 15 வருட காப்புறுதி மேற்கொண்ட காப்புறுதியாளர் ஒருவர் காப்புறுதி வருடம் நிறைவுற்றதை தொடர்ந்து காப்புறுதி பணத்தை பெற்று கொள்வது தொடர்பாக மன்னார் எச்.என்.பி  அசுரன்ஸ் காப்புறுதி முகாமையாளரை தொடர்பு கொண்ட போது இவ்வருடம் முழுப்பணத்தையும் பெற்றுக்கொள்ளாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இவ் வருடம் குறித்த நபர் முகாமையாளரை தொடர்பு கொண்ட போது முகாமையாளர் குறித்த நபரின் வீட்டுக்கு சென்று தற்போது நீங்கள் செய்த காப்புறுதியில் இலாபம் எதுவும் கிடைக்காது எனவும் நட்டமே மிஞ்சும் எனவும் ,  புதிய நடை முறையை நீங்கள் மாற்றி இருக்க வேண்டும் ஆனால் நீங்கள் மாற்றவில்லை.
 எனவே புதிதாக தான் ஒரு நடவடிக்கை மேற்கொண்டு தருவதாகவும் அதன் மூலம் தற்போது உங்களுக்கு 64 ஆயிரம் ரூபாய் தருவதாகவும் மிகுதி மொத்தப்பணம் 5 வருடங்களின் பின்னர் தருவதாகவும் அவ் ஐந்து வருடத்திற்குள் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவை நீங்கள் செலுத்த வேண்டும் என தெரிவித்து உண்மை நிலையை தெரியப்படுத்தாது ஒப்பமும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
குறித்த விடையம் தொடர்பாக உண்மை நிலையை அறிந்து கொள்ள எச்.என்.பி அசுரன்ஸ் நிறுவன முகாமையாளரை சந்திக்க சென்ற ஊடகவியளாலரை தொலைபேசி ஊடாக அழைத்து இவ்வாறான விடயங்களுக்கு தன்னை சந்திக்க முடியாது எனவும் தான் மற்ற முகாமையாளர்களை போன்று 12 , 13  ஆம் ஆண்டு பாடசாலை கல்வியை முடித்து விட்டு வேலைக்கு வந்த முகாமையாளர் நான் இல்லை எனவும் நீங்கள் எவ்வளவு பெரிய ஊடகவியலாளராக இருந்தால் செய்ய முடிந்ததை செய்யவும் என அச்சுறுத்தும் தொணியில் தெரிவித்துள்ளார்.
குறித்த முகாமையாளரின் இவ்வாறான ஏமாற்று வேலை தொடர்பாக பொலிஸாருக்கு முறையிட உள்ளதோடு,   மத்திய வங்கியின் காப்புறுதி பிரிவுக்கு முறைப்பாட்டு கடிதம் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுள்ளது.
இதே நேரத்தில் குறித்த முகாமையாளர் குறித்த நிதி நிறுவனத்தின் கீழ் பணியாற்றிய ஊழியர்களின் கொமிசன் (தரகு) பணத்திலும் அதிகளவான பணத்தை குறித்த முகாமையாளர் ஊழல் செய்துள்ளதாக குறித்த நிறுவனத்தின் மன்னார் கிளையில் கடமையாற்றி பாதிக்கப்பட்டு  தற்போது வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்ற முன்னாள் ஊழியர்கள் சிலர் தெரிவித்துள்ளமயும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்