Fri. May 17th, 2024

விடுதலைப் புலிகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பவர்கள் மீது தொடர்ச்சியான விசாரணை அச்சுறுத்தல்

விடுதலைப் புலிகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பவர்கள் மீது தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுக்கக் கூடிய ஒரு ஏதுவான நிலை எதிர் வரும் காலங்களில் வடக்கு,கிழக்கு எங்கும் நிகழலாம் என நாங்கள் ஊகிக்கின்றோம் என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அவரது அலுவகத்தில் இன்று வியாழக்கிழமை (21) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்துதெரிவிக்கையில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தின நிகழ்வுகளை முன்னெடுத்தமை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க கொழும்பில் இருந்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று புதன் கிழமை மன்னாரிற்கு வந்து என்னிடம் விசாரனைகளை முன்னெடுத்து இருந்தார்கள்.
எனக்கு மட்டும் இல்லை எனது குழுவில் உள்ள சிலரும் விசாரனைக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர்.கடந்த மாவீரர் தினம் முடிவடைந்து சுமார் 7 மாதங்களை கடக்கின்றது.
இப்போது இதைப் பற்றி விசாரிப்பதற்கு என்ன அவசியம் இருக்கின்றது என்று தெரியவில்லை.இவ்வாறு தான் கடந்த 2017 ஆம் ஆண்டு விசாரனை மேற்கொள்ளப்பட்டது.
2016 ஆம் ஆண்டு நிகழ்வை ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பாக என்னை கொழும்பிற்கு விசாரனைக்கு அழைக்கப்பட்டேன்.
இன்றைய இந்த சூழ் நிலையில் அரசாங்கம் தெற்கில் பௌத்த தேசிய வாத சிங்கள வாக்குகளை தன்னகர்த்திக் கொள்ளும் ஒரு போக்கிற்காகவே வடக்கு கிழக்கில் இவ்வாறான தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மீதும் விடுதலைப் புலிகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பவர்கள் மீதும் தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுக்கக் கூடிய ஒரு ஏதுவான நிலை எதிர் வரும் காலங்களில் வடக்கு கிழக்கு எங்கும் நிகழலாம் என நாங்கள் ஊகிக்கின்றோம்.
அரசாங்கம் சிங்களவர்களை திருப்திப்படுத்தி பௌத்த தேசிய வாதத்தின் ஊடாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று சிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லாமல் ஆட்சியை நகர்த்தக் கூடிய ஒரு நிலைப்பாட்டில் ஒரு அங்கமாகவே இதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
சிங்கள மக்களை வடக்கு கிழக்கிலே நெருக்கடி கொடுப்பதன் ஊடாக  அந்த நெருக்கடிகளை இந்த அரசாங்கம் சரியாக கையாளுன்கிறது.
அவர்களுக்கு மிகச்சிறந்த அரசாங்கம் ராஜபக்சவின் அரசாங்கம் என்கின்ற பிரதி பலிப்பிற்காகவே இந்த நகர்வுகளை அரசாங்கம் நன்கு திட்டமிட்டு நகர்த்துவதாகவே நாங்கள் பார்க்க கூடியதாக இருக்கிறது.
2005 இல் இருந்து 2015 வரைக்கும் ராஜபக்சவின் ஆட்சியில் இவ்வாறான அடக்கு முறைக்கும் ஒடுக்கு முறைக்கும் தமிழர் தாயகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளாக இருந்தாலும் சரி தமிழ் தேசிய உணர்வாளர்களாக   இருந்தாலும் சரி வெள்ளை வான் கடத்தல்கள் முதல் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வரைக்கும் பல்வேறு விதமான குற்ற பின்னணிகளை செய்த அரசு தற்போது ஆட்சியில் இருக்கின்ற காரணத்தினால் 2009 இன அழிப்பை முன்னெடுத்தவர்கள் இப்பொழுதும் ஜனாதிபதியாக இருக்கின்ற காரணத்தினால் இவ்வாறான நிலையை அவர்கள் மீண்டும் கையில் எடுக்கக் கூடிய ஒரு நிலை தோற்றம் பெற்றிருக்கின்றன.
அது மாத்திரமல்ல நேற்று முன்தினம் நடைபெற்ற யுத்த வெற்றி வாத நிகழ்விலும் கூட சர்வதேச சமூகத்தில் இருந்து தாங்கள் விலகக்கூடிய நிலை ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி மிரட்டுவது போல் ஒரு மிகச்சிறிய நாடாகிய இலங்கையில் புதிய ஜனாதிபதி யும் தான்தோன்றித்தனமான   சிறுபிள்ளைத்தனமான கருத்தை முன்வைத்திருக்கிறார்.
சர்வதேசத்தில் இருக்கின்ற எல்லா அமைப்புக்களில் இருந்தும் இலங்கை அரசாங்கம் விலகிவிடும்.இராணுவத்துக்கு அவகீர்த்தி ஏற்படுகின்ற நிலைப்பாட்டை சர்வதேச அமைப்புகள் ஏற்படுத்தினால் தாங்கள் விலகி விடுவோம் என சொல்கின்றார்கள்.
இந்த பின்னணிகள் எல்லாமே தாங்கள் ஒரு நடைமுறைப் படுத்தப் படாத இராணுவ நிர்வாக அழகையும் இராணுவ மேட்டிமைவாத போக்கையும் இலங்கையிலே முன்னெடுப்பதற்கு ஏதுவான கலச் சூழ் நிலைகளை உருவாக்குவதற்கும் இராணுவப் பின்னணி உள்ள அரசமைப்பை கொண்டுவருவதற்கும் ஏறக்குறைய தற்போது அரசில் 22 இராணுவ அதிகாரிகள் அரசினுடைய நிறுவனங்களிலும் அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகவும் திணைக்களங்களின் தலைவர்களாக  இருக்கும் போக்கு காணப்படுகிறது.
 இந்த ஆறு மாதத்தில் 22 அதிகாரிகளை கோத்தபாய ராஜபக்ச அவர்கள் நியமித்திருக்கிறார்.தொடர்ந்தும் இராணுவ மேலாதிக்கத்தை ஒரு உட்புகுத்துகின்ற  நிலைப்பாடும் நாட்டிலே பிரகடனப் படுத்தப் படாத இராணுவ ஆட்சியை கொண்டுவருகின்ற ஒரு போக்காகவே  காணப்படுகிறது.
அது மாத்திரமல்ல 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் இன்றைய ஜனாதிபதி ஒரு அமைச்சைக் கூட வகிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில் அவர் தற்பொழுது பாதுகாப்பு அமைச்சராக இருக்கின்றார்.
 எப்படி இருக்கின்றார் என்கின்ற கேள்வியை 19ஆவது திருத்தத்தை வரைந்த கலாநிதி ஜெயம்பதி அவர்களோ அல்லது சட்டத்தரணி சுமந்திரன் அவர்களோ இந்த விடையத்தில் மௌனம் காக்கின்ற விடையம் ஒரு வேடிக்கையாக இருக்கிறது.
ஏனெனில் இவர்கள் நீதிமன்றத்தை நாடலாம். அல்லது இதற்கு எதிரான ஒரு பரிகாரத்துக்கு போகலாம்.எதுவுமே இல்லாமல் சிங்கள முற்போக்குவாதிகள் அல்லது சிங்கள சட்டத்தரணிகள் அல்லது ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சட்ட உருவாக்கத்தில் ஈடுபட்டவர்கள் கூட இவ்வாறான மௌனத்தை காப்பது  இந்த நாட்டிலே ஒரு ஜனநாயகத் தன்மையை இல்லாமல் செய்கின்ற ஒரு போக்கை தான் எதிர் காலத்தில் உருவாக்கி விடும்.
ஏனெனில் கோத்தபாய ராஜபக்ஸ மீதான அச்சம் அல்லது அவர் மீதான பயம் என்பதனால்  ஜெயம்பதி அவர்கள் ஊடகவியலாளர்கள் இவ்வாறாக கேள்வியை முன் வைத்த போதும் கூட பதிலளிக்க முடியாமல் போகும் நிலை காணப்படுகிறது.
 அந்த நிலையைத்தான்   சுமந்திரன் அவர்களும் தொடர்கிறார்.
 ஆகவே எதிர் காலத்தில் இவ்வாறான நிலை தொடரப் போகின்றது என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் தாங்கள் உருவாக்கிய அரசியல் அமைப்பில் கேள்விக்கு உள்ளாக்குகின்ற  ஒரு நிலைப்பாட்டைத்தான் இன்றைய ராஜபக்சே அரசு செயல் படுத்தி வருகின்றது.
 அதனுடைய தொடர்ச்சிதான் இவ்வாறான மிரட்டல்களும் அல்லது வடக்கு கிழக்கில் தமிழ் உணர்வாளர்களை முடக்குகின்ற  செயல்பாடுகளும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அல்லது விடுதலைப் புலிகள் சார்ந்த நிகழ்ச்சிகளை நடக்கவிடாமல் தடுக்க போக்கு காணப்படுகின்றது.
இவ்வாறான  நிலை வந்தாலும் கூட நாங்கள் எங்களால் முன்னெடுக்கப்படுகின்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.
வருகின்ற பிரச்சனைகளை எதிர் கொள்வோம். சட்ட ரீதியாக அவர்கள் அனகினாலும்   கூட நாங்கள் நீதிமன்றத்துக்கு செல்லவும் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறான மிரட்டல்களுக்கும் அல்லது விசாரணைகளுக்கோ அல்லது நானாகாம் மாடி  அழைப்புகளுக்கோ நாங்கள் ஒருபோதும் பயந்த விடவும் மாட்டோம், அச்சப்படவும் மாட்டோம்  என்பதனை ஆட்சியாளர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகின்றோம்.
கொரோனா  தாக்கம் ஏற்படும் வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை நடத்துவதற்கு பல்வேறு விதமான தடைகளை விதித்த பொலிஸாரும், அரசாங்கமும் யுத்த வெற்றி விழாவில் ஜனாதிபதி கூட முகக்கவசம் அணியாமல் இருந்து அந்த நிகழ்வில் பங்கு பெற்றிருக்கிறார்.
 ஆகவே அவர்களுக்கு கோரோணா பிரச்சனை இல்லை. எங்களுக்குத் தான் பிரச்சனை என்று சொல்கின்ற அரசாங்கத்தினுடைய போக்கு   கண்டிக்கத்தக்கது.
 ஒரு சிறு பிள்ளைத்தனமான கருத்துக்களையும் பொறுப்பற்ற விதத்தில் கருத்துக்களையும் அரசாங்கத்தினுடைய சர்வதேச ரீதியான உரையாடல்களும் சிறுபான்மை மக்கள் மீதான போக்குகளும் கண்டிக்கத்தக்க விடயமாக இருக்கிறது.
 ஒரு ஜனநாயகப் பண்புகளையும் ஜனநாயகம் மரபுகளையும் உள்ளடக்கி    நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கும் இவ்வாறான நிலைமைகளை அவர்கள் தோற்றுவிக்கக் கூடிய ஏதுவான  சூழல் வடக்கு கிழக்கில் வராத வரைக்கும் அவர்கள் எங்கள் மீதான காழ்ப்புணர்வு ரீதியான செயல்பாட்டுக்கு நாங்கள் ஒரு போதும் அடி பணிந்து விட மாட்டோம்.
 எங்கள் கொள்கைகளும் இலட்சியங்களும் இவ்வாறான நிகழ்வுகளை நாம் முன்னெடுப்போம். அவர்களுக்கு அச்சம் அடைய மாட்டோம் என்பதையும் சொல்லி வைக்க விரும்புகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்