Sun. May 19th, 2024

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் யூபிலி நடைபவனி-

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு கலை கலாச்சார சமூக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இடம் பெற்று வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் , பழைய மாணவர்கள் இணைந்து  ஏற்பாடு செய்த மாபெரும் நடை பவனியானது இன்று சனிக்கிழமை (11) காலை 9.30 மணியளவில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகியது.
குறித்த நடை பவனி பாடசாலையில் ஆரம்பித்து மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியூடாக சென்று எழுத்தூர் வீதியை சென்றடைந்தது.
பின் பிரதான வீதியூடாக சென்று மன்னார் பிரதான பாலத்தடியை சென்றடைந்தது.குறித்த நடை பவனியின் போது பல்வேறு நிகழ்வுகளும் இடம் பெற்றது.
மீண்டும் குறித்த நடை பவனி பாடசாலையை சென்றடைந்தது.
குறித்து நடை பவனியில் மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உற்பட முன்னால் அதிபர்கள், ஆசிரியர்கள் ,பழைய மாணவர்கள், என சுமார் 2500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நடை பவனி ஆரம்பிக்கப்பட்ட போது வட மாகாணத்தில் முதல் முறையாக புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் கல்லூரி கொடியானது வைபவரீதியாக வானுர்தி (ஹெலிகாப்டர்); மூலம் மன்னார் மாவட்டம் முழுவதும் பவனியாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெறும் கலை கலாச்சார நிகழ்வுகளுடன் குறித்த நடை பவணியானது நிறை வடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்