Fri. May 17th, 2024

மன்னாரில் விழுது மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் ‘சர்வதேச மனித உரிமைகள்’ தினத்தையொட்டி விழிர்ப்புணர்வு கருத்தமர்வு.

மன்னார் மாவட்ட விழுது மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் ‘சர்வதேச மனித உரிமைகள்’ தினத்தையொட்டி இளையோர் மற்றும் கிராம மட்டத்தலைவர்கள் மத்தியில் விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் விழிர்ப்புணர்வு கருத்தமர்வு இன்று வெள்ளிக்கிழமை (13) காலை 10.30 மணியளவில் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.

–மன்னார் மாவட்ட விழுது மேம்பாட்டு மையத்தின் இணைப்பாளர் ஜெகநாதன் டலிமா தலைமையில் இடம் பெற்ற குறித்த விழிர்ப்புணர்வு கருத்தமர்வில் பெண்கள் சமாசம் மற்றும் இளையோர் வலையமைப்பைச் சேர்தோர் கலந்து கொண்டிருந்தனர்.
‘சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான கருத்துக்களையும்,விரிவுரைகளையும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் மற்றும் நிறுவன அபிவிருத்தி அலோசகர் நிக்ஸன் றோச் ஆகியோர் நிகழ்த்தினர்.
-இதன் போது அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகளும் தமது கருத்துக்களைளும்,ஆலோசனைகளையும் முன் வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்