Fri. May 17th, 2024

மன்னாரில்   காற்றுடன் கூடிய மழை காரணமாக 75 குடும்பங்களைச் சேர்ந்த 254 பேர்கள் பாதிப்பு.

மன்னார் மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு  பெய்த காற்றுடன் கூடிய கன மழை காரணமாக அதிகமான வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதுடன் தோட்ட செய்கைகள் பாதிப்படைந்துள்ளது.

 அத்துடன் அதிகளவான மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.
 நள்ளிரவு 12 மணி தொடக்கம் கடும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தை அடுத்து மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலக பிரிவுகளிலும் 75 குடும்பங்களை சேர்ந்த 254 நபர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவற்றில் மன்னார் நகர் பிரதேச செயலக பிரிவில் 28 குடும்பங்களை சேர்ந்த 91 நபர்களும் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 18 குடும்பங்களை சேர்ந்த 60 நபர்களும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 13 குடும்பங்களை சேர்ந்த 43 நபர்களும் முசலி முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 8 குடும்பங்களை சேர்ந்த 25 நபர்களும் மடு பிரதேசச் செயலாளர் பிரிவில்  6 குடும்பங்களை சேர்ந்த 25 நபர்கள் பாதிக்கப்படுள்ளனர் .
 குறிப்பாக   ஜீவபுரம், சாந்திபுரம், ஜிம்றோன் நகர் ,வஞ்சியன் குளம் ,தரவான்கோட்டை  வெள்ளாங்குளம் ,சிறுநாவற்குளம் , உற்பட  அதிகளவான கிராமங்களில் வீடுகள் பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் சேதம் அடைந்துள்ளது
 அதே நேரத்தில் முன்னால் வீடமைப்பு நிர்மாண துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவால் வீட்டு திட்டம் வழங்கப்பட்டு முதலாம் இரண்டாம் கட்ட  மிகுதி பணம் வழங்கப்படாமல் பழையா வீடும் இன்றி புதிய வீடும் கட்டி முடிக்கப்படாத நிலையில் தற்காலிக கொட்டில்களில் வசித்து வந்த அதிகமான மக்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர்.
 இந்த நிலையில் குறித்த பாதிப்புகள் ஏற்பட்ட வீடுகளுக்கு கிராம சேவகர் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் விஜயம் மேற்கொண்டு பாதிப்பு தொடர்பான விபரங்களை சேகரித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்