Thu. May 16th, 2024

மன்னாரில் இருந்து ஆராதனைக்குச் சென்றவர்கள் அடையாளம் காணப்பட்டால் உடன் அறியத்தரவும்

மடு, நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இருந்து ஆராதனைக்குச் சென்றவர்கள் அடையாளம் காணப்பட்டால் உடன் அறியத்தரவும்-என்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட். தெரிவித்தார் 
நானாட்டான் மற்றும் மடு பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் திடீர் கண்காணிப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் தெரிவித்தார்.
நானாட்டான் மற்றும் மடு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் வசிக்கும் மக்களில் யாராவது தனியாக அல்லது குடும்பமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த போதகர் ஒருவரின் ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இருந்தால் உடனடியாக   பொது சுகாதார வைத்திய அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வருமாறு மக்களிடம் கோரிக்கை முன் வைத்தார்.
குறித்த கோரிக்கையினை நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் விடுத்துள்ளார்.
சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த போதகர் ஒருவரின் ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்னும் சந்தேகத்தில் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள 5 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
அதே போன்று மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேக்கம் கிராமத்தில் 6 குடும்பங்களும்   அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்   அவர்களது வீட்டிலேயே அவர்களை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மடு மற்றும் நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ளவர்களில் யாராவது யாழ்ப்பாணம் சென்று குறித்த ஆராதனையில் கலந்து கொண்டிருந்தால், அல்லது கலந்து கொண்டவர்கள் தொடர்பில் விபரம் தெரிந்தால் உடனடியாக நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறித்த பிரதேசங்களில் இன்றைய தினம் திங்கட்கிழமை திடீர் கன்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அடையாளம் காணப்பட்ட நபர்கள் இருந்தால் 070-2819493 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் தொலைபேசி இலக்கம்-  (070-2819493)

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்