Tue. May 21st, 2024

ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 362 வாகனங்களுடன் மொத்தம் 1589 பேர் கைது

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக வார இறுதியில் கிட்டத்தட்ட 1,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக வெள்ளிக்கிழமை மாலை 6 மணியில் இருந்து நேற்று இரவு 10.00 மணி வரை நாடு முழுவதும் மொத்தம் 1,589 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி உள்ளிட்ட 362 வாகனங்களும் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் வீதிகளில் வந்ததற்காகவும், மதுவை வாங்குதல் மற்றும் உட்கொள்வது, வீதிகளில் வாகனத்தில் பயணம் செய்தல், உணவகங்களை திறந்து வைத்திருத்தல், போதையில் சாலைகளில் கட்டுக்கடங்காத விதத்தில் நடந்து கொள்வது போன்ற சம்பவங்கள் குறித்தும மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே வடக்கில் உள்ள 5 மாவட்டங்கள் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களைத் தவிர, மற்றைய இடங்களில் இன்று காலை 6 மணிக்கு நாட்டில் போலீஸ் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்