Tue. May 14th, 2024

மண்டான் கடல் நீரேரியில் இறால் பிடிக்க அமைச்சரால் அனுமதி

17.05.2021. காலை கடற்தொழில் நீர்வள அமைச்சர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இறால் பிடிப்பதற்கான அனுமதியை வழங்கி வைத்தார்.

03.03.2021. அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் மண்டான் கடல் ஏரியில் 40 இலட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டது. இறால் குஞ்சுகள் இரண்டரை மாதங்களில் வளர்ந்து கடல் தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்ற நோக்கில் விடப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை அமைச்சரால்  இறால் பிடிப்பதற்கான அனுமதியைவழங்கி வைக்கபட்டது. இந்நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாக அமைப்பாளர் ரங்கேஸ்வரன்யாழ் மாவட்ட கடற்தொழில் நீரியல் வள உதவிப்பணிப்பாளர் சுதா அவர்கள் .காங்கேசன்துறை எஸ் எஸ் பி அவர்களும் பொலிஸ் பொறுப்பதிகாரி கே. எம். ஏ.கே. கோனாரா.பொதுமக்கள் கலந்து கொண்டார்கள் அமைச்சர் பேசும் போதும்ஜனாதிபதிக்கும் பிரதம மந்திரிக்கும் கடல் தொழில் செய்பவர்கள் நன்றி செலுத்த வேண்டும் எனவும் பேசும்போது கூறினார் மாண்டான் கடல் தொழில் சங்கத்தின் தலைவர் நன்றி உரை வழங்கும்போது தங்களுடைய வாழ்வாதாரத்தை எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனிக்காத நிலையில்அமைச்சர் நடவடிக்கை எடுத்து தங்களுடைய வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்காக40 லட்சம் இறால் குஞ்சுகளை மண்ட ன் கடலில்ஏரியில் விடப்பட்டது இந்த வருடம் கட்டான நிலையிலும் வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இன்றுரால் பிடிப்பதற்கான அனுமதி வழங்கியிருப்பதுகஷ்டத்தில் இருந்து விடுபடுவதற்கான ஒரு நடவடிக்கையாக அமைந்துள்ளது அமைச்சரை கைகூப்பி வணங்குகின்றோம் என கடல் தொழில் சங்கத்தின் தலைவர் தனது நன்றி உரையில் தெரிவித்துள்ளார் மண்டான் ஏரியில் கடல் தொழில் செய்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

கடந்த வருடமும் இவ்வாறு அமைச்சரால் விடப்பட்டு வெற்றிகரமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்