Tue. May 14th, 2024

மகேஸ் சேனாநாயக்கவின் பக்கம் தாவிய கூட்டமைப்பின் மாநகர உறுப்பினர்!!

ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவிற்கு தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் நா.தனேந்திரன் ஆதரவு வழங்கியுள்ளார்.

தேசிய மக்கள் இயக்கம் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகைதந்தார்.

கொழும்பில் இருந்து ரயிலில் யாழ்ப்பாணத்திற்கு வந்த மகேஸ் ஸேநாயக்கவிற்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட்து.

இந்த வரவேற்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் ரெலோ கடசியினை பிரதிநிதுத்துவப் படுத்தும் மாநகர சபை உறுப்பினர் நா.தனேந்திரன் முன்னாள் இராணுவ தளபதிக்கு பொன்னாடை போட்டு வரவேற்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்