Wed. May 15th, 2024

போராட்டம் காரணமாக ஹாங் காங் விமானநிலையம் மூடும் நிலையில்

ஹாங் காங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அணைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள். இதுவரை செக் இன் பண்ணப்படாத அணைத்து விமானங்களும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்படுள்ளது. ஹாங் காங் விமானநிலையத்தில் இடம்பெற்றுவரும் போராட்டம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்படுள்ளது. 160 மேற்பட்ட விமானங்கள் மாலை 18:00 மணிக்கு பின்னர் புறப்பட இருந்ததாகவும், இவை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.


ஹாங் காங் சர்வதேச விமானநிலையம் உலகிலேயே அதிக விமானங்கள் தரை இறங்கி செல்லும் விமான நிலையங்களில் ஒன்றாகும். ஒருவருடத்தில் மொத்தம் 75 மில்லியன் பிரயாணிகளும் 428,000 விமானங்களும் தரை இறங்கிச்செல்லும் விமான நிலையமாக உள்ளது.
இங்கு பல நாட்களாக நடந்து வரும் போராட்டத்தின் போது பொலிஸாரின் கண்ணீர் புகை மற்றும் ரப்பர் குண்டு தாக்குதல்களில் பலர் காயமடைந்து உள்ளார்கள்.இருந்தபோதும் காயங்களுடனும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணமுள்ளார்கள்.
ஹாங் காங்கில் உள்ள குற்றவாளிகளை சீனாவுக்கு அனுப்புவதற்காக புதிதாக கொண்டுவர இருந்த சட்டத்திருத்தத்தினால் இந்த போராட்டம் ஆரம்பமாகி பலமாதங்களாக தொடர்ந்தவண்ணமுள்ளது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்