Fri. May 17th, 2024

பூநகரி பிரதேச விவசாயிகளுக்கு எலிக்காய்ச்சல் விழிப்புணர்வு.

பூநகரிபிரதேசத்திலுள்ள விவசாயிகளுக்கான எலிக்காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டமொன்று திங்கட்கிழமை பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

பூநகரி சுகாதாரவைத்திய அதிகாரி தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் சுகாதாரவைத்திய அதிகாரி மருத்துவர் துஷ்யந்தனும் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றெனனால்டடும் விவசாயிகளுக்கான விழிப்புணர்வுகளை வழங்கினர்.

பருவகாலப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கவுள்ளதால் தொற்றுடைய எலிகளின் சிறுநீர் நீருடன்கலந்து வயல் வேலையில் வெற்றுகால்களுடன் ஈடுபடும்போது இந்தநோய் தொற்றுகின்றது. நோக்கான உரிய சிகிச்சை உரிய நேரத்தில் பெறாதுவிடின் அங்கசெயலிழப்புகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழலாம். எனவே வயலில் எலிகளைக் கட்டுப்படுத்துவதற்காக எலிகளை வேட்டையாடும் பறவைகள், ஊர்வனவற்றின் வரவை அதிகரிக்கும் வழிகளக்கையாளுதல், வரம்பை அண்டிய புற்றுக்களை அகற்றுதல், முழங்கால் வரை மூடிய நீர்கசியாத காலணிகள் மற்றும் கையுறைகளை அணிவதும் நோய் பரவுகின்ற பகுதியிலுள்ளோர் முற்பாதுகாப்பிற்கான மருந்துகளை உரிய வைத்திய ஆலோசனையுடன் பெறுவது முற்பாதுகாப்பு நடவடிக்கைகளாகும்.
எனவே விவசாயிகள் இந்நோய்பற்றி விழிப்பாக இருக்கவேண்டியது மிக அவசியமாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

ஃபெயாமெட் நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இக் கருத்தமர்வில் விலசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள்பலரும் கலந்துகொண்டு தங்கள் சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்