Sun. May 12th, 2024

புது குண்டை தூக்கிபோட்ட சொஹைப் அக்தர்- இந்தியா பந்துவீச்சாளர் முஹம்மட் சமி தன்னிடம் ஆலோசனை பெற்றார்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமட் சமி தன்னிடம் ஆலோசனை பெற்றதாக பாக்கிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொஹைப் அக்தர் தெரிவித்துள்ளார் .2019 உலக கிண்ணப்போட்டிகளில் இந்தியா அரையிறுதியுடன் வெளியேறியதை தொடர்ந்து முகமட் சமி என்னை தொடர்புகொண்டதாக அவர் குறிப்பிட்டார் .

உலக கிண்ண தொடரிலிருந்து இந்தியா வெளியேறிய பின்னர் சமி என்னை தொடர்புகொண்டு இந்திய அணியின் வெற்றிக்காக பங்களிப்பு வழங்க முடியவில்லை என கவலை வெளியிட்டார் என அக்தர் தெரிவித்துள்ளார்.

நான் அவரிடம் இதனால் சோர்வடைந்து நம்பிக்கையை இழக்கவேண்டாம் என்றும் உடற்தகுதியை நன்றாக பேணுங்கள் என ஆலோசனை வழங்கியதுடன் , முகமட் சமியிடம் ரிவேர்ஸ் ஸ்விங் வீசும் திறன் உள்ளது இந்திய துணைக்கண்டத்தில் பெரிய விடயம் என்பதால் அவரை நீங்கள் ரிவேர்ஸ் ஸ்விங்கில் மன்னராக மாறாலாம் எனவும் குறிப்பிட்டு ஆலோசனை வழங்கினேன் என்று அக்தர் குறிப்பிட்டார்

தென்னாபிரிக்காவினுடனான முதலாவது டெஸ்டில் துடுப்பாட்டவீரர்களிற்கு சாதகமான ஆடுகளத்தில் முகமட் சமி பல விக்கெட்களை வீழ்த்தியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ள அவர், பாக்கிஸ்தான் வீரர்கள் என்னிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளாதது கவலையான விடயம் எனவும் குறிப்பிட்டார் .

இந்த பேட்டி நிச்சயம் இந்தியாவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்த போகின்றது. முஹம்மட் சமியின் கிரிக்கெட் வாழ்க்கையை கூட புரட்டி போடக்கூடியதாக அமையலாம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் எந்த வித தொடர்களிலும் ஆடாத நிலையிலும் , அண்மையில் அதிகரித்திருக்கும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான அரசியல் மற்றும் இராணுவ தொடர்புகள் அதல பாதாளத்தில் இருக்கையில் அக்தர் இப்படி ஒரு குண்டை போட்டது பெரிதாக வெடிக்கும் என்றே எதிர்பார்க்கலாம்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்