Thu. May 16th, 2024

பிரதேச மட்ட கொரோனா மற்றும் டெங்கு கட்டுப்பாடு தொடர்பான மீளாய்வு கூட்டம்

வட மாகாண சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைவாவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில்  பிரதேச மட்டத்தில் கொரோனா மற்றும் டெங்கு பரவலை கட்டுப்பாடுத்துவது  தொடர்பான மீளாய்வுக் கூட்டம்  இன்று செவ்வாய்கிழமை நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார் தலைமையில் நானாட்டான் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் காலை 10 மணியாலவில் இடம் பெற்றது.
 
  குறித்த கூட்டத்தில்  நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடை முறைகள் தொடர்பாகவும் மக்கள் மத்தியில் மேற்கொள்ள வேண்டிய விழிர்ப்புணர்வு தொடர்பாகவும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் .ரூபன் லெம்பேட் அவர்களினால் விசேட தெளிவூட்டல் வழங்கப்பட்டது.
 
மேலும்  பெய்து வரும் மழை காரணமாக  டெங்கு நோய் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மேற்கொள்ள வேண்டிய நடை முறைகள் தொடர்பான விடையங்களும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
 அத்துடன் “கொரோனா” பாதுகாப்பு நிலை தொடர்பான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாகவும் தெளிவு படுத்தப்பட்டது. 
 
குறித்த  கூட்டத்தில் 
நானாட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிராந்திய பொது பரிசோதகர்கள், சமூக இடைவெளியை பேணி முககவசங்கள் அணிந்து கூட்டத்தில் கலந்த்து  கொண்டமை குறிப்பிடதக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்