Sun. May 19th, 2024

பிரதேச/நகர சபைகளில் வெற்றிடமாகவுள்ள செயலாளர் பதவியை வழங்க கோரிக்கை

வடக்கு மாகாண பிரதேசசபை  – மற்றும் நகர சபைகளின்  ஏற்படும் செயலாளா் பதவி  வெற்றிடங்களுக்கு அரசாங்க நிறுவனங்களில்  10 வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய  அபிவிருத்தி உத்தியோகஸ்தா்களை  (Development  officers)  நியமனம் செய்ய வடமாகாண  ஆளுநா் பி.எஸ்.எம் சாா்ள்ஸ் நடவடிக்ககை எடுத்து வருகிறதாக தொிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில்  ஐந்து மாவட்டங்களிலும்  உள்ள பிரதேச சபை, நகர சபைகள் சிலவற்றில்  செயலாளா்  பதவி வெற்றிடங்கள் நிலவுவதாகவும்  அவ் வெற்றிடங்களுக்கு  10 வருடங்களுக்கு மேல் அரச நிறுவனங்களில் கடமையாற்றிய  அபிவிருத்தி அலுவலா்களை நியமனற்கு ஆலோசனை செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

முன்னாள் மாகாண பொதுச்சேவை உறுப்பினா்  ஒருவா் கருத்துத் தெரிவிக்கையில்   வடக்கு மாகாண சபைகளின் செயலாளா் நியமனம்  வட மாகாண பொதுச்சேவையின் கீழ்வரவேண்டும் எனவும்,
முன்னாள் வடமாகாண ஆளுநா்  பளிக்ககார  என்பவா்  செயலாளா்களின் நியமன அதிகாரத்தை  மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் ஆலோசனைகளை கேட்காது வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு வழங்கியதாலேயே  இவ்வாறான  தாமதங்கள் ஏற்படுவதாக தொிவிக்கப்படுகின்றது.
மன்னாா்,  கிளிநொச்சி மற்றும் பிரதேசங்களில நிலவும் பிரச்சனை குறித்து விரைவில் சம்பந்தப்பட்ட  சபைகளின் தலைவா்களும் விரைவில் வடக்கு மாகாண ஆளுநரை சந்திக்கவுள்ளதாக தொியவருகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்